செய்திகள்,திரையுலகம் செப்டம்பரில் சிம்பு-நயன்தாரா காதல்!…

செப்டம்பரில் சிம்பு-நயன்தாரா காதல்!…

செப்டம்பரில் சிம்பு-நயன்தாரா காதல்!… post thumbnail image
சென்னை:-நடிகர் சிம்புவும், நடிகை நயன்தாராவும் சேர்ந்து நடித்துள்ள படம் ‘இது நம்ம ஆளு’.இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க டி.ராஜேந்தர் தயாரிக்கிறார்.படத்திற்கு சிம்புவின் தம்பி குரலரசன் இசையமைக்கிறார். அவர் இசையமைக்கும் முதல் படம் இது.

இப்படம் காதல் மற்றும் காமெடி கலந்த ஒரு பொழுதுபோக்கான படமாக அமையும் என்று படத்தின் இயக்குனர் ஏற்கெனவே கூறியுள்ளார்.மேலும், படத்தில் சிம்பு, நயன்தாராவின் நடிப்பை பற்றி அனைவரும் பாராட்டும் விதமாக அமைந்துள்ளது. இதில், சூரி, சந்தானம் காமெடியில் கலக்கியுள்ளனர். தற்போது படம் இறுதிகட்டத்தில் உள்ளது.

இது நம்ம ஆளு படம் செப்டம்பர் வெளியீடாக திரைக்கு வரும் என்று சிம்புவின் தந்தையான டி.ஆர் தெரிவித்துள்ளார். சிம்பு-நயன்தாரா இருவரும் காதல் முறிவிற்குப் பிறகு இப்படத்தில் ஜோடி சேர்ந்திருப்பதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி