சென்னை:-நடிகர் விஜய் நடித்து வெளிவர உள்ள படம் கத்தி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்துள்ள இந்த படத்தை லைக்கா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.தீபாவளிக்கு வெளியிடாக தயாராகி வரும் இப்படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாணவர்கள் முன்னேற்ற முன்னணியை சேர்ந்த இருபது பேர் சவுத் இந்தியன் பிலிம் சேம்பரில் படத்துக்கு எதிராக மனு கொடுத்தனர்.
மனுவில் கத்தி படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் சிங்கள அரசுக்கு நெருக்கமாக உள்ளது. எனவே இந்த நிறுவனம் தயாரிக்கும் கத்தி படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது. தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.ஆனால் இதனை மறுத்த படத்தின் இணை தயாரிப்பாளரான ஐங்கரன் இன்டர்நேஷனலும், டைரக்டர் முருகதாசும் கூறியபோது, இலங்கை அரசுடன் லைக்கா நிறுவனத்துக்கு எவ்வித தொடர்பும் இல்லை. இலங்கை போரால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்தான் லைக்கா நிறுவனத்தை நடத்துகிறார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி