கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடிக்கும் படம் ‘லிங்கா’. ரஜினி மீண்டும் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் என்பதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சந்தானம், தேவ் கில், ஜெகபதி பாபு, விஜயகுமார், ஆர். சுந்தர்ராஜன் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.ஹைதராபத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் அனுஷ்கா மற்றும் ரஜினிகாந்த் நடனம் ஆடும் ரொமான்டிக் டூயட் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படத்தை ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரஜினி , அனுஷ்கா ஆடிய அப்பாடல் அனைவரையும் மிகவும் கவரும் எனவும் மேலும் ரஜினியின் ரசிகர்களுக்கு விருந்தாகவும் அமையும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி