செய்திகள்,திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் கௌதம் மேனன் படத்தில் அஜித் மகளாக நடிக்கும் அனிகா…!

கௌதம் மேனன் படத்தில் அஜித் மகளாக நடிக்கும் அனிகா…!

கௌதம் மேனன் படத்தில் அஜித் மகளாக நடிக்கும் அனிகா…! post thumbnail image
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா , அருண் விஜய் நடிக்கும் படம் ‘தல 55’. வீரம் படத்திற்குப் பிறகு அஜித் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படம். கௌதம் மேனன் படம் என்றாலே ஹீரோக்கள் ஸ்டைலாகவும் மேலும் இதுவரை பார்க்காத அளவு வித்தியாசமாகவும் இருப்பார்கள். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.ஃபிளாஷ்பேக் கதையில் அஜித்-த்ரிஷா இருவரும் ஏழு வயது குழந்தைக்கு பெற்றோராக நடிப்பதாக தகவல் வெளியானது.

தற்போது அந்த குழந்தை கதாபாத்திரத்தில் நடிக்கப் போகும் குழந்தை யார் என்பதே கேள்வியாக இருந்த நிலையில் ‘ஒண்ணும் மிண்டதே’, ‘5 சுந்தரிகள்’ , ‘ரேஸ்’ போன்ற மலையாள படங்களில் முக்கிய குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி