செய்திகள்,திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் விஜய்க்காக இந்திப்பட வாய்ப்பை நிராகரித்த நடராஜ்…!

விஜய்க்காக இந்திப்பட வாய்ப்பை நிராகரித்த நடராஜ்…!

விஜய்க்காக இந்திப்பட வாய்ப்பை நிராகரித்த நடராஜ்…! post thumbnail image
‘சதுரங்கவேட்டை’ படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் நட்டி நட்ராஜ். தற்போது சிம்புதேவன் இயக்கும் விஜய் படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற உள்ளார். இதற்காக, பாலிவுட் பட வாய்ப்பைக் கூட வேண்டாம் என நிராகரித்துள்ளார்.

விஜய்யின் ‘ஜில்லா’ படத்திற்கு கேமராமேனாக இருந்த நட்ராஜ் , ‘ஜப் வி மெட்’, ‘டெஸி பாய்ஸ்’, ‘ரஞ்சனா’, ‘ஹாலிடே’ உள்ளிட்ட பல இந்திப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.’ஜில்லா’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்போது ஒளிப்பதிவாளராகும் வாய்ப்பு வரவே இதனால் இரண்டு பெரிய இந்திப் படங்களை கூட மறுத்துள்ளார்.

” இது முழுக்க முழுக்க விஜய் படம் என்பதாலேயே ஒப்புக்கோண்டேன். முதலில் வந்த இரு வாய்ப்புகள் இப்படித்தான் கைநழுவி பிறகு ‘ஜில்லா’வில் வாய்ப்பு கிடைத்தது. இம்முறை அந்த தவறை செய்யப் போவதில்லை” என்கிறார் நட்ராஜ்.

இப்படத்தில் ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி , சுதீப் ஆகியோர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி