செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் டிஜிட்டலுக்கு மாறும் ‘ஒரு வடக்கன் வீர கதா’!…

டிஜிட்டலுக்கு மாறும் ‘ஒரு வடக்கன் வீர கதா’!…

டிஜிட்டலுக்கு மாறும் ‘ஒரு வடக்கன் வீர கதா’!… post thumbnail image
சென்னை:-தமிழில் கர்ணன், வசந்த மாளிகை, எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் டிஜிட்டலாக மாற்றப்பட்டு மறு திரையீடு செய்யப்பட்டதைப்போன்று, காலத்தால் அழிக்க முடியாத காவியங்களாக இருக்கும் மலையாள படங்களும் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வருகிறது.

இதன் முதற்கட்டமாக 25 ஆண்டுகளுக்கு முன்பு மம்முட்டி நடித்த ஒரு வடக்கன் வீர கதா என்ற படம் டிஜிட்டல் படுத்தப்படுகிறது. எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய வரலாற்று கதையை ஹரிஹரன் இயக்கி இருந்தார். பாலன் கே.நாயர், சுரேஷ் கோபி, மாதவி, கீதா, கேப்டன் ராஜ். சுகுமாரி நடித்த படம்.
16ம் நூற்றாண்டில் தெற்கு கேரளாவை ஆண்ட ஒரு மன்னின் கதை. பல்வேறு விருதுகளை குவித்த இந்தப் படம் மலையாளத்தில் டாப் 10 படங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி