‘மங்காத்தா’வில் அஜித்துக்கு, ‘துப்பாக்கி’யில் விஜய்க்கு கிடைத்த மாஸ் ஹிட் ‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுக்குக் கிடைக்கும் என்று பேசப்பட்டு வரும் தருணம் இது. இந்த சூழலில், தன்னடக்கத்துடன் சூர்யா சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
” அஜித்தும், விஜய்யும் என்னை விட வயதிலும், அனுபவத்திலும் சீனியர்ஸ். அவர்களின் 25 வருட உழைப்புதான் இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது. இது ஒரே இரவில் நடந்துவிடக்கூடிய விஷயம் இல்லை.
ஆனால், எனக்கு இதைப் போன்று எந்த இலக்கும் இல்லை. புதிது புதிதாக எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் ஒவ்வொரு படத்தையும் பார்த்துப் பார்த்து தேர்வு செய்கிறேன். எனக்குள் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை. எந்த ஒப்பீடும் என்னை சலனப்படுத்தாது” என்கிறார் சூர்யா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி