செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் பாடகரானது மகிழ்ச்சியளிக்கிறது – சூர்யா பெருமிதம்…!

பாடகரானது மகிழ்ச்சியளிக்கிறது – சூர்யா பெருமிதம்…!

பாடகரானது மகிழ்ச்சியளிக்கிறது – சூர்யா பெருமிதம்…! post thumbnail image
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஞ்சான்’. இப்படத்தை லிங்குசாமி இயக்குகிறார். சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். யுவன் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் பத்திரிகையாளர்களுக்காக இன்று பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர் சூர்யா, நடிகை சமந்தா, இயக்குனர் லிங்குசாமி, இசையமைப்பாளர் யுவன், சூரி, தயாரிப்பாளர் யுடிவி தனஞ்செயன், சந்திரபோஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்,

சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் பார்த்திபன், சசி, விஜய், தயாரிப்பாளர்கள் கேயார், அபிராமி ராமநாதன், ஞானவேல்ராஜா, மதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் சூர்யா பேசும்போது, சிங்கம் படத்திற்கு பிறகு ஒரு நல்ல கதையுள்ள படத்தில் நடிக்கணும் நினைச்சேன். அப்பொழுதுதான் லிங்குசாமி என்னிடம் 4 கதையை ரெடி செய்துகொண்டு வந்து என்னிடம் காட்டினார். அதில், 4-வது கதை எனக்கு ரொம்பவும் பிடித்துப் போனது. அதுதான் அஞ்சானாக உருவாகியிருக்கிறது. இன்னொரு கதையும் எனக்கு பிடிச்சிருந்தது. ஆனால், அந்த கதையில் கார்த்தி நடிக்கிறார்.

இந்த படத்தில் ‘ஏக்தோ தீன்’ என துவங்கும் பாடலை எனது சொந்த குரலில் பாடி இருக்கிறேன். இந்த பாடல் டிராக்கை யுவன் பாடி பதிவு செய்து வைத்து இருந்தார். பாட்டை நான் கேட்டுவிட்டு, நல்ல பாடகரை இந்த பாடலுக்கு பாட வைக்க வேண்டும் என்று லிங்குசாமியிடம் தெரிவித்தேன். திடீரென யுவன்ஷங்கர் ராஜாவும் லிங்குசாமியும் நீங்களே பாடுங்கள் என கூறி விட்டனர்.

முதலில் பாட ரொம்பவும் தயக்கமாக இருந்தது. ஸ்டூடியோவுக்கு அழைத்து என் குரலில் அந்த பாடலை பதிவு செய்தனர். இரண்டு மணி நேரத்தில் முடித்து விட்டு என்னை போகச் சொன்னார்கள். நான் சரியாக பாடவில்லை என்று அனுப்பி விட்டார்கள் என நினைத்தேன். பிறகு பாடல் நன்றாக வந்துள்ளது என்று என்னை பாராட்டினர். முதல் தடவையாக நான் பாடிய பாடல் திரையில் வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனக்கு நாளை பிறந்த நாள் ஆகும். இன்று இந்த விழா எனது பிறந்தநாள் மாதிரியே நடப்பதாக உணர்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது. எனது பிறந்த நாள் விழாவில் ரசிகர்கள் பெரிய பேனர்கள் வைத்து கொண்டாட வேண்டாம். நலிவடைந்தவர்களுக்கு உதவி செய்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன். என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு நிறைய ரசிகர்கள் ரத்ததானம் செய்திருக்கிறார்கள். அது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது.

இவ்வாறு சூர்யா பேசினார்.

அகில இந்திய சூர்யா ரசிகர் மன்ற தலைவர் பரமு, தமிழ் மாநில அமைப்பாளர் ப.செல்வம், செயலாளர் இரா.வீரமணி, ஒருங்கிணைப்பாளர் எஸ்.எல்.குமார், தலைமை மன்ற காப்பாளர் புரசை ஆர்.ஏ.ராஜ் உள்பட ஏராளமானோரும், சூர்யா ரசிகர்களும் விழாவில் பங்கேற்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி