செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ‘இந்திரஜித்’ படத்தில் நடிக்கும் அஜித் பட வில்லன்…!

‘இந்திரஜித்’ படத்தில் நடிக்கும் அஜித் பட வில்லன்…!

‘இந்திரஜித்’ படத்தில் நடிக்கும் அஜித் பட வில்லன்…! post thumbnail image
‘என்னமோ ஏதோ’ படத்தைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக் ‘சிப்பாய்’, ‘வை ராஜா வை’ மற்றும் ‘இந்திரஜித்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.’இந்திரஜித்’ படத்தின் ஐம்பது சதவீத படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர். கௌதம் கார்த்திக்கு நல்ல ஆக்ஷன் படமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் முக்கிய சேஸிங் காட்சிகளை கோவா, பாண்டிச்சேரி, மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் படமாக்கியுள்ளனர்.

படத்தின் முக்கிய வில்லனாக அஜித்தின் ‘பில்லா-2’ படத்தில் வில்லனாக நடித்த சுதன்சு பாண்டே நடித்து வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி