தொடர்ந்து இங்கிலீஷ்காரன், உனக்கும் எனக்கும், வட்டாரம், முனி, மருதமலை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது, நடிகர் சரத்குமார் நடிக்கும் ‘சண்டமாருதம்’ படத்தில் நடித்து வந்தார். நேற்று சென்னையில் நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு இரவு வடபழனி மன்னார் தெருவில் உள்ள வீட்டுக்கு திரும்பினார். காலை 6 மணிக்கு திடீர் என்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். நடிகர் தண்டபாணி மாரடைப்பு காரணமாக இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகர் – நடிகைகள் விரைந்து சென்று தண்டபாணி உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் தண்டபாணியின் சொந்த ஊர் திண்டுக்கல் ஆகும். அங்கு இறுதிச் சடங்கு நடக்கிறது. இதற்காக அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் கொண்டு செல்லப்படுகிறது. அவரது குடும்பத்தினரும் உடன் செல்கிறார்கள்.மரணம் அடைந்த நடிகர் தண்டபாணிக்கு வயது 71. மனைவி இல்லை. லெனின், விமலாகித்தன், பழனிகுமார் என்ற மகன்களும், ராஜேஷ்வரி என்ற மகளும் உள்ளனர். சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளில் வேகமாக முன்னேறி குறுகிய காலத்திலேயே தமிழ், தெலுங்கு உள்பட 50 படங்களில் நடித்தார். சினிமாவில் நடிப்பதற்கு முன்பு திண்டுக்கல்லில் கடை வைத்து பொறி வியாபாரம் செய்து வந்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி