செய்திகள்,திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளில் ரிலீசாகும் ‘லிங்கா’…!

சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளில் ரிலீசாகும் ‘லிங்கா’…!

சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளில் ரிலீசாகும் ‘லிங்கா’…! post thumbnail image
‘கோச்சடையான்’ படத்துக்கு பின் ரஜினி நடிக்கும் படம் ‘லிங்கா’. இதில் அவர் இரு வேடங்களில் வருகிறார். ஜோடியாக அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்தது. அங்கு கன்னடர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டிக்கு மாற்றப்பட்டது. அங்கு பெரிய அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். சண்டை காட்சிகளும் படமாகி வருகிறது.

பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பில் ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக செய்திகள் பரவின. இதனை கே.எஸ்.ரவிக்குமார் மறுத்தார். நல்ல ஆரோக்கியத்தோடு சுறுசுறுப்பாக ரஜினி நடித்து வருவதாக கூறினார்.

‘லிங்கா’ படத்தை தனது பிறந்த நாளான டிசம்பர் 12–ந்தேதி ரிலீஸ் செய்யும்படி ரஜினி கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அந்த நாளில் படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி