நடிகர் அருண் விஜய் டிவிட்டரில் கூறியதாவது;- அஜித் நடித்து வரும் 55-வது திரைப்படத்தில் நான் அவருடன் வில்லன் கதாபாத்தரித்தில் நடிக்கிறேன் இந்த படத்தில் அனுஷ்கா, த்ரிஷா, ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தை கெளதம்மேனன் இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துவருகிறார். ஏ.எம்.ரத்னம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார்.
தற்போது படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அனுஷ்கா, அஜீத் டூயட் காட்சிகள் இப்போது எடுக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்கா சென்றுள்ள த்ரிஷா சென்னை திரும்பிய பின், அஜித் – த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளைக் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று நடிகரும் விஜயகுமாரின் மகனுமான அருண்விஜய் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் சேர்ந்து நடிப்பது எனக்க்கு இரட்டிப்பு மகிச்சியை அளிக்கிறது இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு பெரும் வரவேற்பை பெறும் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி