செய்திகள்,திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் உலக திரைப்பட விழாவில் இடம்பெற்ற ‘மஞ்சப்பை’…!

உலக திரைப்பட விழாவில் இடம்பெற்ற ‘மஞ்சப்பை’…!

உலக திரைப்பட விழாவில் இடம்பெற்ற ‘மஞ்சப்பை’…! post thumbnail image
ஜூலை 22ம் தேதி ‘பிரிக்ஸ்’ எனும் உலக திரைப்பட விழா சென்னையில் நடைபெற உள்ளது. பிரேசில், ரஷ்யா,இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா (Brazil, Russia, India, China, South Africa) ஆகிய நாடுகள் இணைந்த குழுமத்தின் பெயர்தான் பிரிக்ஸ் (BRICS).இந்த விழாவில் பல்வேறு நாடுகளின் படங்கள் திரையிடப்பட உள்ளன.இதில் தமிழ் மொழி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே படம் விமல், ராஜ்கிரண், லட்சுமி மேனன் நடித்த ‘ மஞ்சப்பை’ மட்டுமே.

ராகவன் இயக்கிய ‘மஞ்சப்பை’ , தாத்தா , பேரன் உறவு முறையை மையமாக கொண்டு உருவான படம். திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் அனைத்து தரப்பு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது..

தற்போது பிரிக்ஸ் விழாவில் திரையிடப்பட இருப்பது இப்படத்திற்கு கிடைத்த கூடுதல் மதிப்பு என்றே கூறலாம்.

‘பிரிக்ஸ்’ விழா வரும் ஜூலை 22ம் தேதி சென்னை ரஷ்யன் கல்சர் சென்டரில் நடைபெற உள்ளது..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி