செய்திகள்,திரையுலகம் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை திரிஷா!…

ஜெய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை திரிஷா!…

ஜெய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை திரிஷா!… post thumbnail image
சென்னை:-இளம் நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க மாட்டேன்; பெரிய ஸ்டார்களுடன்தான் நடிப்பேன் என்று சவால் விட்ட நடிகை திரிஷா, சான்ஸ் இல்லாததால் இறங்கி வந்திருக்கிறார். கோலிவுட் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேருகிறார். டைரக்டர் மணிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் ஜெய் ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.

இந்தப் படத்தில் நகர்ப்புறத்து நவநாகரீக நங்கை வேடம் திரிஷாவுக்கு. இந்த கேரக்டரும் கதையும் பிடித்திருந்ததால் இதில் நடிக்க திரிஷா ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. படத்தின் பெயர் பொடியன். வழக்கம்போல இந்த டைட்டிலுக்கும் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது. முதலில் பொடியன் டைட்டிலை மணிமாறன்தான் ரிஜிஸ்டர் செய்து வைத்துள்ளார்.

அதை அவர் புதுப்பிக்காமல் விட்டதால், தற்போது அது இயக்குனர் தங்கர் பச்சான் கைக்கு மாறி விட்டதாம். இந்த டைட்டிலை பெற தங்கர் பச்சானுடன் பேச்சு வார்த்தை நடக்கிறதாம். படத்தை ஆகஸ்ட்டில் தொடங்க மணிமாறன் திட்டமிட்டிருக்கிறார். ஜீவா போன்ற இளம் நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று சொன்னவர் திரிஷா. தற்போது பட வாய்ப்பு இல்லாததால் அவர் இறங்கி வந்திருப்பதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி