செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ‘யங் சூப்பர் ஸ்டார்’ பட்டம் வேண்டாம் என சிம்பு திடீர் முடிவு!…

‘யங் சூப்பர் ஸ்டார்’ பட்டம் வேண்டாம் என சிம்பு திடீர் முடிவு!…

‘யங் சூப்பர் ஸ்டார்’ பட்டம் வேண்டாம் என சிம்பு திடீர் முடிவு!… post thumbnail image
சென்னை:-குழந்தை நட்சத்திரமாக அப்பா டி.ராஜேந்தர் இயக்கிய படங்களில் நடித்தபோதே, ஐ ஆம் ய லிட்டில் ஸ்டார், ஆவேன் நான் சூப்பர் ஸ்டார் என்று பாட்டு பாடி ஆடியவர் சிலம்பரசன். அதனால் தான் கதாநாயகன் ஆனபோது யங் சூப்பர் ஸ்டார் என்று தனக்குத்தானே பட்டத்தை சூட்டிக்கொண்டார்.

ஆனால், அவருக்குப் போட்டியாக தனுஷின் ரசிகர்கள் அவருக்கு இளைய சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை சூட்டினர். இந்நிலையில், தற்போது அஜீத், விஜய்க்கிடையே அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்கிற போட்டி கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பதால், இந்த போட்டிக்கு நடுவே நாமும் யங் சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக்கொண்டு திரிந்தால் தன்னை ஆளாலுக்கு கிண்டல் செய்வார்கள் என்பதால், இப்போது யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை துறக்க முடிவு செய்து விட்டாராம்.

அடுத்து அவர் நடிப்பில் திரைக்கு வரவுள்ள வாலு படத்தில் அஜீத், சூர்யா போன்ற நடிகர்கள் தங்களது பெயரை டைட்டிலில் போடுவது போன்று சிம்பு நடிக்கும் வாலு என்று மட்டுமே தனது பெயரை போட்டுக்கொள்ள முடிவெடுத்துள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி