செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் பார்வையற்றவர்கள் கணினி கற்க உதவும் கையுறை அறிமுகம்!…

பார்வையற்றவர்கள் கணினி கற்க உதவும் கையுறை அறிமுகம்!…

பார்வையற்றவர்கள் கணினி கற்க உதவும் கையுறை அறிமுகம்!… post thumbnail image
கணினி யுகமாக விளங்கும் இந்தக் காலத்தில், பார்வையற்றவர்கள் கணினியைப் பயன்படுத்துவது அரிதான விஷயமாக உள்ளது. இனி அவர்களும் கணினி இயக்கலாம் என்கிறார்கள் ஜார்ஜியா தொழில்நுட்ப மைய ஆய்வாளர்கள். நவீன கையுறை ஒன்றை உருவாக்கி உள்ள அவர்கள், அதை அணிந்து கொண்டால் பார்வையற்றவர்களும் கணினி மொழியை புரிந்து கொள்ளலாம் என்கிறார்கள். அந்தக் கையுறையானது கணினி தகவல்களை பார்வையற்றவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி முறையில் மொழி பெயர்த்து விடுகிறது.

ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆய்வாளர்கள், பியானோ டச் குளோவ் எனப்படும் கையுறையை உருவாக்கி இருந்தனர். இது பியானோ கற்கும் இளையோர்களுக்கு உதவிகரமாக இருந்தது. அதே தொழில்நுட்ப அடிப்படையில் பார்வையற்றவர்கள் கணினி கற்கும் கையுறையை தற்போது அறிமுகம் செய்துள்ளனர். உலகில் உள்ள 4 கோடி பார்வையற்றவர்களில் வெறும் 10 சதவீதம் பேரே பிரெய்லி முறையை அறிந்தவர்களாக உள்ளனர். அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. பிரெய்லி முறையை அறிந்தவர்களிலும் கணினி இயக்கும் ஆற்றல் பெற்றவர்கள் வெகு சொற்பம்தான்.

நாங்கள் உருவாக்கி உள்ள கையுறையோ கணினியில் உள்ள எழுத்துகளை பார்வையற்றவர்கள் உணர்ந்து கொள்ளும் எலக்ட்ரானிக் உணர்வுகளாக பிரெய்லி முறைக்கு மாற்றி வழங்கும். அதேபோல தட்டச்சு செய்யும்போதும் அந்த வார்த்தைகளை ஆடியோ முறையில் வாசித்துக் காட்டவும், பிரெய்லி முறையில் உணர்ந்து கொள்ளவும் உதவுகிறது. எனவே அவர்களால் கணினியை இயக்கவும், அதன் வழியே தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் முடியும்.பரிசோதனையின்போது அரை மணி நேரத்திற்கு பார்வையற்றவர்களை வீடியோ விளையாட்டு விளையாடச் செய்து சோதித்துப் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி