செய்திகள்,விளையாட்டு உலக கோப்பை வென்ற ஜெர்மனிக்கு ரூ.210 கோடி பரிசு!…

உலக கோப்பை வென்ற ஜெர்மனிக்கு ரூ.210 கோடி பரிசு!…

உலக கோப்பை வென்ற ஜெர்மனிக்கு ரூ.210 கோடி பரிசு!… post thumbnail image
பிரேசிலா:-உலக கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணிக்கு 18 கேரட் தங்க கோப்பையுடன் ரூ.210 கோடி பரிசு தொகையும் வழங்கப்பட்டது. உலக போட்டி வரலாற்றில் இவ்வளவு அதிகமான பரிசு தொகை வழங்கப்பட்டது இல்லை. கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கு ரூ.180 கோடிதான் கிடைத்தது.

2–வது இடத்தை பிடித்த அர்ஜென்டினா அணிக்கு ரூ.150 கோடி பரிசாக வழங்கப்பட்டது.
3–வது இடத்தை பிடித்த நெதர்லாந்து அணிக்கு ரூ.120 கோடியும், 4–வது இடத்தை பிடித்த பிரேசில் அணிக்கு ரூ.108 கோடியும் கிடைத்தது.கால் இறுதியில் தோற்று வெளியேறிய பிரான்ஸ், கொலம்பியா, பெல்ஜியம், கோஸ்டாரிகா ஆகிய 4 அணிகளுக்கு தலா ரூ.84 கோடியும், 2–வது சுற்றில் வெளியேறிய சிலி, உருகுவே, மெக்சிகோ, கிரீஸ், நைஜீரியா, அல்ஜீரியா, சுவிட்சர்லாந்து, அமெரிக்க ஆகிய 8 அணி களுக்கு தலா ரூ.54 கோடியும் வழங்கப்பட்டன.

முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்ட ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து, குரோஷியா, கேமரூன், ஆஸ்திரேலியா, ஜவேரி கோஸ்ட், ஜப்பான், ஈகுவடார், ஹோண்டுராஸ், போஸ்னியா, ஈரான், போர்ச்சுக்கல், கானா, ரஷியா, தென்கொரியா ஆகிய 16 அணிகளுக்கு தலா ரூ.48 கோடியும் பரிசாக கிடைத்தன.கிளப் அணிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு உள்பட இந்த உலக கோப்பையின் மொத்த பரிசு தொகை ரூ.3456 கோடியாகும். இது கடந்த உலக கோப்பையைவிட 37 சதவீதம் கூடுதலாகும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி