செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் நடிகர் அஜீத்தின் முதல் காதலி!…

நடிகர் அஜீத்தின் முதல் காதலி!…

நடிகர் அஜீத்தின் முதல் காதலி!… post thumbnail image
சென்னை:-சினிமாவில் நடிக்கத் தொடங்குவதற்கு முன்பிருந்தே அஜீத் ஒரு பைக் ரேஸர். அமராவதியில் நடிக்கும்போதெல்லாம் சினிமாவை விட பைக் ரேஸைதான் தனது எதிர்காலமாக நினைத்தார். ஆனால் அதையடுத்து வான்மதி, ஆசை, காதல் கோட்டை போன்ற படங்கள் வெற்றி பெற்றபோது தனக்கு ரேஸை விட சினிமாவில்தான் எதிர்காலம் இருக்கிறது என்பதை உணர்ந்தார்.

அதனால் அதுவரை அடிக்கடி பைக் ரேஸ்களில் கலந்து கொண்டு வந்த அஜீத், பின்னர் அதை குறைத்து விட்டு நடிப்பில் முழு ஈடுபாடு காட்டத் தொடங்கினார்.இருப்பினும், தனது முதல் காதலி பைக் ரேஸ் என்பதால், இப்போதும் தான் பைக் ரேஸர் என்று சொல்வதை அவர் பெருமையாக நினைக்கிறார். அதனால், சில சமையங்களில் சென்னைக்கு அருகில் தான் நடிக்கும் படங்களின் படப்படிப்புகள் நடந்தால் பைக்கிலேயே பயணிக்கிறார்.

ஆரம்பம் படத்தில் ஒரு காட்சியில் ரேஸ் பைக்கை ஓட்டியபடி நடித்த அஜீத், இப்போது கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்கும் தனது 55வது படத்திலும் சில காட்சிகளில் ரேஸ் விளையாட்டிற்கு தான் பயன்படுத்திய அதே பைக்கில் வருகிறாராம். ஒரு சண்டை காட்சியில் அந்த பைக்கில் வந்து வேகமாக வில்லன்கள் மீது மோதுவது போன்றும் நடித்துள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி