இந்த சம்பவத்துக்குப் பிறகு இம்மாதம் வெளியீடு என்று பூலோகம் படத்தின் விளம்பரங்கள் நாளிதழ்களில் வந்து கொண்டிருந்தன. இதற்கிடையில் அதே பட நிறுவனம் தயாரித்த திருமணம் எனும் நிக்காஹ் படமும் இம்மாதம் ரிலீஸ் என்று சொல்லப்பட்டு வந்தது. பூலோகம், திருமணம் எனும் நிக்காஹ் இரண்டில் ஏதாவது ஒரு படத்தை மட்டுமே இம்மாதம் வெளியிட முடியும் என்ற நிலை ஏற்பட்டதும், திருமணம் எனும் நிக்காஹ் படத்தை ஜூலை 24 அன்று வெளியிடுவது என்று முடிவெடுத்துவிட்டார் தயாரிப்பாளர்.
எனவே பூலோகம் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போடப்பட்டுவிட்டது. ஜூலை 24 அன்று வெளியாகவிருக்கும் திருமணம் எனும் நிக்காஹ் படம் வெற்றியடைந்தால் அடுத்த ஓரிரு வாரங்களில் பூலோகம் படம் வெளியாக வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை திருமணம் எனும் நிக்காஹ் வெற்றியடையாவிட்டால் பூலோகம் படத்தை மீண்டும் கிடப்பில் போட்டுவிடுவார் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி