செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் செவ்வாய் கிரக ஆராய்ச்சி: இன்னும் 75 நாட்களில் இலக்கை எட்டும் மங்கள்யான்!…

செவ்வாய் கிரக ஆராய்ச்சி: இன்னும் 75 நாட்களில் இலக்கை எட்டும் மங்கள்யான்!…

செவ்வாய் கிரக ஆராய்ச்சி: இன்னும் 75 நாட்களில் இலக்கை எட்டும் மங்கள்யான்!… post thumbnail image
பெங்களூர்:-செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் கடந்த நவம்பர் மாதம் 5-ம் தேதி மங்கள்யான் விண்கலத்தை ஏவியது. கடந்த 8 மாதங்களாக விண்ணில் பறந்து செவ்வாய்க்கிரகம் நோக்கி சென்று கொண்டிருக்கும் மங்கள்யான், தனது பயணத்திட்டத்தில் இன்னும் 75 நாட்கள் மட்டும் தான் பூர்த்தி செய்யவேண்டும்.

செப்டம்பர் மாதம் 24ம் தேதி மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகம் அருகில் சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்த விண்கலம் 525 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தை கடந்துள்ளது. தற்போது பூமியிலிருந்து அனுப்படும் ரேடியோ சிக்னல்கள் விண்கலத்தை சென்றடைய 15 நிமிடங்கள் ஆவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 11ம் தேதி விண்கலத்தின் போக்கில் இரண்டாவது முறையாக திருத்தங்கள் செய்யப்பட்டன. இதன் மூலம் விண்கலம் சரியான பாதையில் செல்வது உறுதி செய்யப்பட்டது. 450 கோடி ரூபாய் மதிப்புள்ள இத்திட்டத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தை ஆராய விண்கலம் அனுப்பிய நாடுகளின் பட்டியலில் இந்தியா முக்கிய இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி