செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ‘நான் ஈ’ புகழ் ராஜ மௌலி இயக்கும் பாகுபலி படத்தின் மேக்கிங் வீடியோ!…

‘நான் ஈ’ புகழ் ராஜ மௌலி இயக்கும் பாகுபலி படத்தின் மேக்கிங் வீடியோ!…

‘நான் ஈ’ புகழ் ராஜ மௌலி இயக்கும் பாகுபலி படத்தின் மேக்கிங் வீடியோ!… post thumbnail image
நான் ஈ’ படத்தின் இயக்குனரான எஸ்.எஸ். ராஜ மௌலி பிரம்மாண்டமாக இயக்கி வரும் படம் ‘பாகுபலி’. தமிழில் இந்தப் படம் ‘மகாபலி’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை கடந்த ஒரு வருட காலமாக நடத்தி வருகின்றனர். அதை முன்னிட்டு நேற்று ‘பாகுபலி’ படத்தின் ஒரு வருடப் பயணம் என ஒரு டிரைலரையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

பொதுவாக தமிழ், தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளில் ஒரு வருடத்திற்குள்ளாகவே ஒரு படத்தைத் தயாரித்து வெளியிட்டு விடுவார்கள். ஒரு சில படங்கள்தான் பணப்பிரச்சனை காரணமாகவும் வேறு சில பிரச்சனை காரணமாகவும் தாமதமாக தயாராகி வெளிவருவதுண்டு. ஆனால், இந்தப் படம் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா உட்பல பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கத் தயாராகி வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி