திகில் படம் என்றால் பேய், நள்ளிரவு சகஜம். அதனால் பாடல்களை நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட முடிவு செய்தார்கள். விழாவாக வைத்தால் கூட்டம் சேராது என்பதால் ஒரு தனியார் ரேடியோவில் நேற்று நள்ளிரவில் ஆ வின் பாடல்களை வெளியிட்டனர். வெள்ளிக்கிழமை இரவில்தான் பேய்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் வெள்ளிக்கிழமையை தேர்வு செய்தனர்.இதுகுறித்து படத்தின் இயக்குனர்கள் ஹரி-ஹரீஷ் கூறியதாவது: ஒரு படத்தை ஈசியாக எடுத்து விடலாம் அதற்கு விளம்பரம் செய்தவற்குத்தான் ரொம்ப கஷ்டப்பட வேண்டியது இருக்கிறது.
படத்தின் தலைப்பை போலவே பாடல் வெளியீடும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான் நள்ளிரவை தேர்ந்தெடுத்தோம். உலகத்திலேயே நள்ளிரவில் பாடல்களை வெளியிட்டது நாங்களாத்தான் இருக்கும் என்று நினைக்கிறோம். என்றார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி