செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் கௌபாய் வேடத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்…!

கௌபாய் வேடத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்…!

கௌபாய் வேடத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்…! post thumbnail image
லிங்கா படத்தில் ரஜினி கவ்பாய் வேடத்தில் நடிக்கிறார். ஆங்கிலத்தில் கவ்பாய் படங்கள் 1940–க்கு முந்தைய கால கட்டங்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடின. பிறகு அது தமிழ் திரையுலகிலும் பரவியது. வேட்டைக்காரன் படத்தில் எம்.ஜி.ஆர். கவ்பாய் ஆடை அணிந்து நடித்தார். பழைய நடிகர் ஜெய்சங்கர், நிறைய படங்களில் குதிரை துப்பாக்கி சகிதமாக கவ்பாய் ஆக்ஷன் கேரக்டரில் வந்தார்.

தற்போது ரஜினி லிங்கா படத்தில் அந்த வேடம் ஏற்கிறார். சரித்திர காலத்தையும் இப்போதைய கால கட்டத்தையும் இணைத்து இந்த படம் தயாராகிறது. ரஜினி இரு வேடங்களில் வருகிறார். சரித்திர காலத்தில் நடிக்கும் ரஜினி கவ்பாய் உடை அணிந்து சில காட்சிகளில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நாயகியாக சோனாக்சி சின்ஹா, அனுஷ்கா நடிக்கின்றனர். கே.எஸ். ரவிகுமார் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. ஐதராபாத்தில் இதன் பெரும் பகுதி காட்சிகள் படமாகின்றன. பாடல் காட்சிகள் வெளிநாடுகளில் எடுக்கப்படுகிறது. வருகிற டிசம்பரில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி