இப்பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீர் மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றப்பட்டு நிலைமை விரைவில் சரியாகும் என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், முழுவீச்சில் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. 128 மோட்டார் பம்ப் கொண்டு தண்ணீர் வெளியேற்றப்படும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.மழை காரணமாக சென்டிரல் ரெயில்வே- துறைமுகம் மார்க்கத்தில் தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் குர்லா, சுனாபத்தி, பந்தப், டாக்யார்டு மற்றும சியோன் ஆகிய பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ரெயில் 30 நிமிடங்கள் வரை தாமதமாக வந்து செல்கிறது.
மும்பையில் மீண்டும பருவமழை புத்துயிர் பெற்றுள்ளது. அடுத்து 48 மணி நேரம் கடும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை மட்டுமல்லாது கொங்கன் மண்டலம் முழுவதும் மழை பெய்யும் என்று மும்பை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இன்று காலை நிலவரப்படி கொலபா பகுதியில் 101 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி