July 11, 2014

செய்திகள், திரையுலகம், முதன்மை செய்திகள்

வீரம் ரீமேக்கில் அஜித் வேடத்தில் நடிக்கும் சல்மான்கான்…!

நடிகர் விஜய்யின் ‘போக்கிரி’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘வான்டட்’ திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திர நடிகர் சல்மான்கான் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது ‘சிறுத்தை’ புகழ் சிவா இயக்கிய நடிகர் அஜீத்தின் ‘வீரம்’ படத்தின் ரீமேக்கில் அவர் நடிக்க உள்ளதாக திரைத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் இறுதியில் நடிகர் அஜீத்துடன் ஒரு தமிழ்த் திரைப்படத்தை இயக்க உள்ள சிவா, அதன்பின் நடிகர் சல்மான்கான் நடிப்பில் தனது முதல் இந்திப் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். தகராறுகளைத் தீர்ப்பதற்காக வன்முறைகளைப் பயன்படுத்தும் ஒரு நேர்மையான மனிதன் பற்றிய கதை இதுவாகும். தன்னுடைய காதலிக்காகத் தனது நடைமுறைகளை மாற்றிக்கொள்ள இவர் நினைக்கும்போது தனது காதலியின் குடும்பம் ஒரு ஆபத்தில் சிக்கியுள்ளது தெரியவருகின்றது. அவர்களை எப்படியாவது அந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுடன் அவர் செயல்படுவதே கதையின் சாராம்சம் ஆகும். இந்தப் படத்தின் கதை நாயகனையும், அவனது நான்கு சகோதரர்களையும் சுற்றி செல்வதால் இந்தி ரீமேக்கில் சல்மான்கானின் சகோதரர்களான அர்பாஸ்கான் மற்றும் சொஹைல்கான் இருவரும் படத்திலும் சகோதரர்களாக நடிக்கலாம் என்று தெரிகிறது. இந்தத் திட்டம் பற்றிய அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றபோதும் இந்தப் படம் சல்மானுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என பேசப்படுகிறது.

செய்திகள், திரையுலகம், முதன்மை செய்திகள்

விஜய்யின் ‘கத்தி’ படத்தின் பாடல்கள் லண்டனில் ரிலீஸ்…!

கத்தி படத்தில் விஜய் நடிக்கும் கேரக்டரின் முதல் தோற்றம் சமீபத்தில் வெளியானது. பத்திரிகை செய்திகளை பின்னணியாக வைத்து இதை உருவாக்கி இருந்தனர். எனவே ஏதேனும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் தயாராகலாம் என பேச்சு கிளம்பியுள்ளது. மும்பை, ஐதராபாத் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. சமந்தா ஜோடியாக நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை லண்டனில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். செப்டம்பர் 20–ந்தேதி இவ்விழா நடக்கிறது. இதற்காக விஜய், சமந்தா, முருகதாஸ் மற்றும் இதர நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் லண்டன் செல்கிறார்கள். பாடலுக்கு நடன கலைஞர்கள் நேரடியாக மேடையில் நடனம் ஆடுகின்றனர். பின்னர் விஜய், சமந்தா இருவரும் மேடையில் தோன்றி தொகுப்பாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசுகின்றனர். கத்தி படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

செய்திகள், திரையுலகம், முதன்மை செய்திகள்

சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் மீண்டும் இணையும் அஜித்…!

அஜித் நடித்து, பொங்கல் வெளியீடாக வந்த படம் ‘வீரம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, மீண்டும் சிவாவுடன் இணைந்து பணியாற்ற விரும்பிய அஜித், அதற்கான கதையை தயார் செய்யும்படி கூறியிருந்தார். அதன்படி, கதையை தயார் செய்து அஜித்திடம் காண்பித்து அதற்கு ஓகே வாங்கியிருக்காராம் சிவா. தற்போது, கவுதம் மேனன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஜித், அதன்பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தை பிவிபி சினிமா தயாரிக்கிறது. சிவா தற்போது ‘வீரம்’ படத்தின் இந்தி ரீமேக்குக்கான கதையை ரெடி செய்துள்ளார். இந்த கதையில் நடிக்க நடிகர் சல்மான் கானை அணுகியுள்ளார். ஆனால், அவர் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை. இருந்தாலும், அஜித்துடன் தமிழ் படத்தை முடித்துவிட்டுத்தான், ‘வீரம்’ இந்தி ரீமேக்கை சிவா தொடங்குவார் என தெரிகிறது.

செய்திகள், திரையுலகம்

நடிப்புக்கு சம்பளமாக ரூ.11 வாங்கிய பிரபல இயக்குனர்!…

மும்பை:-இந்தித் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கரண் ஜோஹர். ‘பாம்பே வெல்வெட்’ என்ற படத்தில் நடித்ததற்காக வெறும் 11 ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்றுக் கொண்டுள்ளார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக அவர் சம்பளமே வேண்டாம் என்று சொன்னாராம். ஆனால், நட்பின் அடையாளமாக கரணுக்கு 11 ரூபாய்க்கான பிரம்மாண்டமான ஒரு செக்கை வழங்கியிருக்கிறார்கள். இந்த படத்தில் கரண் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது பற்றி தயாரிப்பாளர்களில் ஒருவரான விகாஸ் பாஹ்ல் கூறும் போது, இந்த படத்திற்காக அவர் சம்பளம் எதையும் பெறவில்லை. இந்த படத்தில் நடிப்பது அவருக்கு மிகப் பெரும் ஆர்வமாக இருந்தது. எங்களது மொத்தக் குழுவுமே அவருக்கு கடமைப்பட்டுள்ளோம். இந்த படத்தில் நடிக்க அவர் சம்மதித்ததற்கு மிகப் பெரிய நன்றி சொல்ல வேண்டும். அவர் நடித்துள்ள கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். அதைப் பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஒரு நடிகராக எங்கள் படத்தில் அவர் அறிமுகமாவது எங்களுக்குப் பெருமைதான் என்கிறார். கரண் ஜோஹர் இதற்கு முன் ‘தில்வாலே துஹானியா லே ஜாயங்கே, லக் பை சான்ஸ்’ ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். ‘பாம்பே வெல்வெட்’ திரைப்படம் ஒரு ரொமான்டிக் திரில்லர் படம். ரண்பீர் கபூர், அனுஷ்கா சர்மா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படம் நவம்பர் மாதம் வெளிவர உள்ளது.

செய்திகள், திரையுலகம்

நடிகை காஜலுக்கு பிடித்த ஐதராபாத் பிரியாணி!…

சென்னை:-நடிகை காஜல் அகர்வால் கடுமையான உணவு கட்டுப்பாட்டை பின்பற்றி வருகிறார். ஆனாலும், ஐதராபாத்துக்கு வரும்போதெல்லாம் அங்குள்ள பிரியாணி வாசனை அவரது மூக்கை துளைப்பதால் கட்டுப்பாட்டை மீறி,பிரியாணியை புல்கட்டு கட்டி விடுவாராம். இதனால்,அவரின் உடல் எடை எக்குத் தப்பாகஅதிகரித்து விடுகிறது. வேறுவழியில்லாமல் ஜிம்மில் மணிக் கணக்கில் உடற்பயிற்சி செய்து எடையை குறைத்து உள்ளார். சில நிமிட நாக்கு சுவைக்காக மணிக் கணக்கில் உடற்பயிற்சி செய்து அவஸ்தை பட வேண்டிஉள்ளது என புலம்புகிறாராம் காஜல்.

செய்திகள், திரையுலகம்

நடிகர் தனுஷின் நடிப்பை பாராட்டிய சிம்பு!…

சென்னை:-சிம்பு–தனுஷ் இருவரும் சம காலத்து நடிகர்கள். அதோடு பள்ளியிலும் ஒன்றாக படித்தவர்கள். இருப்பினும், அவர்கள் இருவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்கு வந்ததால், அவர்களுக்கிடையேயும் போட்டி மனப்பான்மை உருவானது. அஜீத்–விஜய் படங்களுக்கு இடையே போட்டி நடப்பது போன்று, சிம்புவும், தனுசும் போட்டிக்கோதாவில் குதித்தனர். அதோடு, பேட்டிகளிலும் மறைமுகமாக ஒருவரையொருவர் தாக்கிப் பேசி வந்தனர். ஆனால், பின்னர் மார்க்கெட்டில் சூர்யா, ஆர்யா,விஷால், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என்று ஏராளமான நடிகர்கள் என்ட்ரி ஆனதால், அவர்களுக்கிடையே இருந்து வந்த போட்டி மனநிலை மாறியது. இருவரும் மீண்டும் மேடைகளில் நண்பர்களாக தோள் போட்டுக்கொணடு ஒரே மைக்கில் மாறி மாறி பேசத் தொடங்கினர். இந்நிலையில், தங்களது நட்பை இன்னும் உறுதிப்படுத்தும் வகையில், தான் சொந்தமாக தயாரித்து நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி படத்தில், சிம்பு நடித்துள்ள வாலு படத்தின் ட்ரெய்லரை இணைத்து வெளியிடுகிறாராம் தனுஷ். முன்னதாக வேலையில்லா பட்டதாரி படத்தின் சில காட்சிகளை சமீபத்தில் தனுஷின் அழைப்பின் பேரில் சென்று பார்த்த சிம்பு, அவரது நடிப்பை வெகுவாக பாராட்டியிருக்கிறாராம். நண்பனின் இந்த வெளிப்படையான பாராட்டில் உருகிப்போய் இருக்கிறாராம் தனுஷ்.

செய்திகள், திரையுலகம்

சிங்கம் ரிட்டன்ஸ் (2014) திரைப்பட டிரைலர்…

தமிழில் சூப்பர் ஹிட்டான ‘சிங்கம்’இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்க, ரோஹித் ஷெட்டி இயக்கியிருந்தார்.கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் வெளியாகிய இந்தப் படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இப்போது ‘சிங்கம் 2’ படம் உருவாகி வருகிறது. இதனை முதல் பாகத்தை இயக்கிய ரோஹித் ஷெட்டியே இயக்க, ‘சிங்கம்’ படத்தில் நடித்த அஜய் தேவ்கனே இதிலும் கதாநாயகனாக நடிக்கிறார்.ஆனால் ‘சிங்கம்’ படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்த காஜல் அகர்வாலும், வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜும் இரண்டாம் பாகத்தில் இல்லை.இதில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க வில்லனாக அமோல் குப்தா நடிக்கிறார்.

செய்திகள், திரையுலகம்

ராமானுஜன் (2014) திரை விமர்சனம்…

கும்பகோணத்தில் சீனிவாசனுக்கும், கோமளத்தம்மாளுக்கும் மகனாக பிறக்கிறார் ஸ்ரீனிவாச ராமானுஜன். ஏழை குடும்பத்தில் வாழ்ந்து வரும் இவர், சிறுவயது முதலே கணிதத்தில் அதிமேதாவியாக இருக்கிறார். இதனால், மற்ற பாடங்களில் சரிவர கவனம் செலுத்தாமல் இருந்து வருகிறார்.மெட்ரிகுலேசனில் முதல் மாணவனாக வரும் இவருக்கு இலவசமாக பி.ஏ. படிப்பு படிக்க கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்குகிறது. ராமானுஜன் அங்கு படிக்கும்போது கணிதத்தில் மட்டுமே அதிக மார்க்குகள் வாங்குகிறார். மற்ற பாடங்களில் தோல்வியை சந்திக்கிறார். இதனால், கல்லூரியிலும் சரி, வீட்டிலும் சரி அவமானத்தையே சந்திக்கிறார். என்னதான் அவமானப்பட்டாலும் இவர் தனது கணித திறமையை மட்டும் குறைத்துக் கொள்வதாயில்லை. நாளுக்கு நாள் இவரது கணித திறமை அதிகரிக்கிறது. கணிதத்தில் மட்டுமே அதிகம் ஆர்வமுடன் இருப்பதால் இவருக்கு சொந்த ஊரில் ஒரு வேலைகூட கிடைக்கவில்லை. சென்னைக்கு செல்லும் ராமானுஜனுக்கு அங்கும் வேலை கிடைத்தபாடில்லை. இதனால் மீண்டும் சொந்த ஊருக்கே திரும்புகிறார்.வேலை கிடைக்காததால், கணித கண்டுபிடிப்புகளையே செய்து வரும் ராமானுஜத்துக்கு கல்யாணம் முடித்து வைத்தால் சரியாகி விடும் என்று அவரது பெற்றோர் ஜானகி என்ற பெண்ணை மணமுடித்து வைக்கின்றனர். கல்யாணம் முடித்துவைத்தாலும், இருவரையும் ஒன்றுசேர வைக்காமல் பிரித்தே வைக்கிறார் ராமானுஜத்தின் தாய். இந்நிலையில், ராமானுஜன் படித்த கல்லூரியில் பணிபுரியும் கணித ஆசிரியரான கிருஷ்ணா ராவ், சென்னையில் வசிக்கும் திவான் பகதூரை, ராமானுஜன் சந்திக்க ஏற்பாடு செய்கிறார். திவான், ராமானுஜனின் கணித குறிப்புகளை பார்த்து வியப்படைகிறார். அவருடைய சிபாரிசின் பேரில் சென்னை போர்ட் டிரஸ்ட்டில் பணியமர்த்தப்படுகிறார். அங்கு பணிபுரியும் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர், இவரது கணித திறமையை பார்த்து, அவருக்காக தனி அறை ஒதுக்கி கணிதத்தை பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வைக்கிறார். அவருடைய ஆராய்ச்சிகள் இந்தியாவோடு நின்றுவிடக்கூடாது என்று எண்ணும் அவர், ராமானுஜனின் கணித கண்டுபிடிப்புகளை தபால் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க ஆலோசனை கூறுகிறார். அதன்படி ராமானுஜனும் தனது கண்டுபிடிப்புகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.அதைப் பார்த்து வியந்துபோன இங்கிலாந்தின் கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஹார்டி, அவரை பாராட்டுவதோடு மட்டுமல்லாமல், இங்கிலாந்துக்கு வரவழைத்து அவரது கணித ஆராய்ச்சிக்கு மேலும் வழிவகுத்து தருகிறார். இந்நிலையில், ராமானுஜனுக்கு இருக்கும் நோய், நாளடைவில் டிபியாக மாறுகிறது. அதோடு, மனைவியை பிரிந்து தனிமையில் வசிக்கும் இவருக்கு ஆறுதல் கிடைக்காமல் மனஉளைச்சலும் ஏற்படுகிறது. இதனால், அவரது உடல்நிலை மேலும் மோசமடைகிறது.அதன்பின்னர், ராமானுஜனின் உடல் நிலை சரியானாதா? அவரது கணித கண்டுபிடிப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? என்பதே கிளைமாக்ஸ்.ராமானுஜனாக அபினய் வட்டி, தன்னுடைய முதல் படத்திலேயே கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அதையும் சிறப்பாக செய்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். இவருக்கு இதுதான் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தனது தாத்தா ஜெமினி கணேசனுக்கு நற்பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது இவரது நடிப்பு. இவரது அப்பா, அம்மாவாக நிழல்கள் ரவி, சுஹாசினி. தனது மகனுடன் மருமகள் இணைந்தால் அவனுக்கு ஆயுள் கம்மி என்று ஜோசியத்தை நம்பி அவனுடன் இணையாமல் இருப்பதற்காக தான் ஒரு வில்லி போன்று சித்தரித்துக் கொள்ளும் கதாபாத்திரத்தில் சுஹாசினி மிளிர்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு படம் முழுக்க வலம்வந்திருக்கும் இவருடைய நடிப்பு அபாராம். நிழல்கள் ரவியும் தன்னுடைய பங்குக்கு அவரது கதாபாத்திரத்தை வலுவேற்றியிருக்கிறார்.ராமானுஜன் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாமா அழகாக இருக்கிறார். நடிப்பிலும் இவரது அழகு பளிச்சிடுகிறது. திவானாக வரும் சரத்பாபு, கணித ஆசிரியராக வரும் மனோபாலா, இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் பணிபுரியும் ஹார்டி கதாபாத்திரத்தில் வரும் கெவின் மெக்கோவன், சேசு ஐயராக வரும் கிட்டு, அப்பாஸ், ஒய்.ஜி.மகேந்திரன், ராதாரவி, மதன்பாப் ஆகியோரது நடிப்பும் மெச்சும்படியாக இருக்கிறது. கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜனின் கண்டிபிடிப்புகளை மட்டுமே பற்றி தெரிந்திருந்த நமக்கு, அவரது வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை 3 மணி நேர படமாக தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஞானராஜசேகரன். படத்தில் ராமானுஜனின் வாழ்க்கையில் ஏற்படும் சோகத்தை கண்ணீரும், கம்பலையுமாக சொல்லியிருக்கும் இயக்குனர், நிறைய இடங்களில் இதுமாதிரியான காட்சிகளை குறைத்து, படத்தின் நீளத்தையும் குறைத்திருந்தால் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும். இந்த மாதிரி காட்சிகள் தொடர்ந்து வரும்போது அந்த கதாபாத்திரத்தோடு நம்மால் ஒன்ற முடியாமல் போகிறது. படத்தில் பிரிட்டிஷாரையே தமிழ் பேச வைத்திருக்கும் இவரது முயற்சி பாராட்டுக்குரியது. கண்டிப்பாக ஒவ்வொரு மாணவ, மாணவியர் மட்டுமின்றி அவரது பெற்றோர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது. இப்படம் உங்கள் வாழ்க்கையிலும் ஒரு பாடமாக அமையும் என்பது மட்டும் உண்மை.ரமேஷ் விநாயகத்தின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசை கதையோடு ஒன்ற உதவியிருக்கிறது. சன்னி ஜோசப்பின் ஒளிப்பதிவு ராமானுஜனின் காலகட்டதோடு பயணிக்கிறது. படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது இவரது ஒளிப்பதிவு. மொத்தத்தில் ‘ராமானுஜன்’ ஒரு தமிழனின் வெற்றி சரித்திரம்……….

செய்திகள், முதன்மை செய்திகள், விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் ஜெர்மனியை மெஸ்சி தோற்கடிக்க வேண்டும் என நெய்மர் விருப்பம்!…

பிரேசில்:-உலக கோப்பை கால்பந்தில் கால் இறுதி ஆட்டத்தில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் முதுகெலும்பில் காயம் அடைந்தார். இதனால் போட்டியில் இருந்து விலகினார். அவர் இல்லாமல் விளையாடிய பிரேசில் அணி அரை இறுதியில் ஜெர்மனியிடம் தோற்று வெளியேறியது.இந்நிலையில் நெய்மார் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பிரேசில் தோல்வி பற்றி கூறியபோது கண்கலங்கினார். உடனே தலையை குனிந்தப்படி கண்ணீரை துடைத்து கொண்டார்.அதன்பின் உணர்ச்சியை கட்டுபடுத்தி கொண்டு பேசினார். பேட்டியின் போது அவர் கூறியதாவது:– என்னை காயப்படுத்திய ஜூனிகா அடுத்த நாள் என்னிடம் மன்னிப்பு கேட்டார். நான் அவரை வெறுக்கவில்லை. அவர் வேண்டுமென்றே காயப்படுத்தியதாக நினைக்க வில்லை.காயம் பற்றி பேசுவது கடினமாக இருக்கிறது. முதுகெலும்பில் இன்னும் 2 செ.மீ விலகி இருந்தால் வீல்சேரில் தான் அமர்ந்து வந்து இருப்பேன்.நாங்கள் சாம்பியன் பட்டம் பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் அதில் தோற்றுவிட்டோம். பிரேசில் ஒரு நல்ல அணி. இருந்தபோதிலும் திறமையை காட்ட தவறிவிட்டோம்.இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அர்ஜென்டினா அணியில் எனது நண்பர் லியோனல் மெஸ்சி உள்ளார். அவர் திறமையான வீரர். அவரும், நானும் பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறோம். அவர் சாம்பியன் பட்டம் வெல்ல தகுதியானவர். அவரை நான் உற்சாகப்படுத்துவேன். இறுதிப்போட்டியில் ஜெர்மனியை அணியை அவர் தோற்கடிக்க வேண்டும். அது நடக்கும் என்று நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார். நாளை நடக்கும் 3–வது இடத்துக்கான போட்டியில் நெதர்லாந்தை எதிர் கொள்ளும் பிரேசில் அணி பயிற்சி முகாமுக்கு நெய்மார் சென்றார். அவரை சக வீரர்கள் வரவேற்றனர். பயிற்சியாளர் ஸ்கோலரி கட்டி தழுவி ஆறுதல் கூறினார்.தோல்வியால் துவண்ட தனது அணி வீரர்களுக்கு ஆறுதல் கூறிய நெய்மர் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உரையாடினார். அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஜெர்மனிக்கு எதிரான அரை இறுதி போட்டியை நெய்மர் தனது குடும்பத் துடன் டி.வி.யில் பார்த்து கொண்டிருந்தார். ஜெர்மனி கோல் மழை பொழிந்ததால் வெறுப்பின் உச்சத்துக்கே சென்று விட்டார்.ஜெர்மனி 7–0 என்ற கோல் கணக்கில் இருந்த போது டி.வி.யை அணைத்து விட்டு எழுந்து வெளியே வந்துவிட்டார். இதனால் கடைசி கட்டத்தில் பிரேசில் வீரர் ஆஸ்கர் அடித்த கோலை அவர் பார்க்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

செய்திகள், பொருளாதாரம், முதன்மை செய்திகள்

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் டெல்லிக்கு இரண்டாவது இடம்!…

புது டெல்லி:-உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் வரிசையில் டோக்கியோவுக்கு அடுத்தபடியாக இந்தியா தலைநகர் டெல்லி இரண்டாவது இடம் பெற்றுள்ளது. 1990க்கு பிறகு டெல்லியின் மக்கள் தொகை இரு மடங்காகியுள்ளதும் ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. உலகின் நகராமாயக்கல் குறித்து ஐநா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளது.வரும் 2030 வரையிலாவது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் வரிசையில் டெல்லி இரண்டாவது இடத்தை தக்க வைத்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கியநாடுகள் அவையின் அறிக்கையில் பட்டிலியிட்டுள்ள நகரங்களின் வரிசையில், ஜப்பான் தலைநகர் டோக்கியா முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் டெல்லியும் உள்ளது. 6 வது இடத்தில் மும்பை உள்ளது. மும்பை வரும் 2030 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையில் நான்காவது இடத்தை பிடிக்கும் என்றும் அந்த அறிக்கை கணித்துள்ளது. டோக்கியா டெல்லியை தொடர்ந்து ஷாங்காய் 23 மில்லியன் மக்கள் தொகையோடு மூன்றாவது இடத்திலும் உள்ளது.

Scroll to Top