செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் மீண்டும் இணையும் அஜித்…!

சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் மீண்டும் இணையும் அஜித்…!

சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் மீண்டும் இணையும் அஜித்…! post thumbnail image
அஜித் நடித்து, பொங்கல் வெளியீடாக வந்த படம் ‘வீரம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, மீண்டும் சிவாவுடன் இணைந்து பணியாற்ற விரும்பிய அஜித், அதற்கான கதையை தயார் செய்யும்படி கூறியிருந்தார்.

அதன்படி, கதையை தயார் செய்து அஜித்திடம் காண்பித்து அதற்கு ஓகே வாங்கியிருக்காராம் சிவா. தற்போது, கவுதம் மேனன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஜித், அதன்பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தை பிவிபி சினிமா தயாரிக்கிறது.

சிவா தற்போது ‘வீரம்’ படத்தின் இந்தி ரீமேக்குக்கான கதையை ரெடி செய்துள்ளார். இந்த கதையில் நடிக்க நடிகர் சல்மான் கானை அணுகியுள்ளார். ஆனால், அவர் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை. இருந்தாலும், அஜித்துடன் தமிழ் படத்தை முடித்துவிட்டுத்தான், ‘வீரம்’ இந்தி ரீமேக்கை சிவா தொடங்குவார் என தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி