வாழ்க்கை வசதி, பணம், வீடு, பங்களா கார் கொடுத்தது சினிமாதான். மகன்கள் மூலம் கோடிக் கணக்கில் இப்போது சம்பாதிப்பதும் சினிமாவில்தான். அப்படி இருக்கும்போது சிவகுமார் இப்படி பேசலாமா என்ற முணுமுணுப்புகள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே அடுத்த அதிரடியை போட்டார்.சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் நடிகர்களை பற்றி அவர் குறிப்பிட்டிருப்பது பலருக்கும் மன வருத்தத்தை அளித்துள்ளது.சினிமாவில் 75 சதவிகிக ஹீரோக்கள் புகை, மது, மாது இதில் ஏதாவது ஒன்றுக்கு அடிமையாக இருக்கிறார்கள். கசாப்பு கடையில் வந்து ஜீவகாருண்யம் பேசினால் எடுபடாது. இது எல்லா சுகங்களும் இலவசமாக கிடைக்கிற இடம். பாகவதர் காலத்திலிருந்தே அப்படித்தான். நானாக தேடிப் போகவில்லை. தானா வந்ததை வேணாமுன்னு சொன்னா நீ ஆம்பளையான்னு கேப்பாங்க என்று சொல்வார்கள்.
படம் வெற்றி பெற்றால் கொண்டாட்டமுன்னு குடிப்போம், தோற்றால் சோகத்தை மறைக்க குடிப்போம். ஏற்றம்னா இமயமலை இறக்கம்னா பாதாளம். ரெண்டையும் அடிக்கடி சந்திப்போம். உணர்ச்சி பூர்வமா நடிப்போம், சீக்கிரம் உணர்ச்சிவசப்பட்டு அழுவோம், தற்கொலைகூட பண்ணிக்குவோம். இங்கு எதுவும் நிரந்தரமில்லை. அதனால் கிடைக்கிற வரைக்கும் எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு போயிடலாமுன்ன நினைக்கிறது மனித இயல்பு.
நான் இதுல எதையும் அனுபவிக்கவில்லை. அதனால் எனக்கு இப்போது கஷ்டமாவும் இல்லை. மனதையும், உடம்பையும் சுத்தமா வச்சிக்கிறதுக்கு சின்ன வயசுலேயே கத்துக்கிட்டேன் அதுவே எனக்கு தகுதியாயிடுச்சு இவ்வாறு சிவகுமார் கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பது சிலருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி