செய்திகள்,திரையுலகம் அமெரிக்காவில் நட்சத்திர கலைவிழா!…

அமெரிக்காவில் நட்சத்திர கலைவிழா!…

அமெரிக்காவில் நட்சத்திர கலைவிழா!… post thumbnail image
சென்னை:-தமிழ் நடிகர் டிங்கு தற்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அங்கு டிங்கு டான்ஸ் அகாடமி என்ற நடனப் பள்ளியை நடத்துகிறார். இந்த நடன பள்ளியின் சார்பில் அமெரிக்காவில் மூன்று நகரங்களில் நட்சத்திர கலை நிகழ்ச்சி நடத்துகிறார். அட்லாண்டாவில் வருகிற 11ம் தேதியும், சான் ஜோஸ் நகரில் 13ம் தேதியும், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 20ம் தேதியும் நடக்கிறது.

இதில் நமீதா உள்ளிட்ட நடிகர் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். ரோபோ சங்கர் உள்ளிட்ட மிமிக்ரி கலைஞர்கள், ரெனைனா ரெட்டி, கணேஷ், அனிஷ் ரெஹான், சண்டி, பிரசாந்த் உள்ளிட்ட பாடகர் பாடகிகள் கலந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சிகளை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் அமெரிக்கா புறப்பட்டு சென்று விட்டனர். டி.டி தனது புது கணவருடன் பறந்திருக்கிறார். நிகழ்ச்சியின் இடைவெளியில் அங்கேயே தேனிலவையும் கொண்டாடுகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி