செய்திகள்,திரையுலகம் லிங்காவில் ரஜினியின் அசத்தல் நடனம்!…

லிங்காவில் ரஜினியின் அசத்தல் நடனம்!…

லிங்காவில் ரஜினியின் அசத்தல் நடனம்!… post thumbnail image
சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடித்து வரும் படம் லிங்கா. இந்த படத்தில் தாத்தா-பேரன் என்ற இரண்டு மாறுபட்ட வேடங்களில் ரஜினி நடிக்கிறார். இந்த படத்தில் ரஜினி பழைய வேகத்துடன் இருக்க மாட்டார் என்பதால் பல புதுமைகளை கதைக்குள் திணித்து சுவாரஸ்யம் கூட்டுவதில் அதிக அக்கறை காட்டுகிறார் ரவிக்குமார்.

அந்த வகையில், கிட்டத்தட்ட வசன காட்சிகளை கடைசி கட்டத்துக்கு கொண்டு வந்து விட்ட அவர், அடுத்து பாடல் காட்சிகளை படமாக்குகிறாராம்.மற்ற படங்களை விட ரஜினி படங்களென்றால் கேட்ட நேரத்தில் பாடல்களை கொடுத்து விடும் ஏ.ஆர்.ரகுமான், சமீபத்தில்தான் ஒரு பாடலை கொடுத்தாராம். அது ரஜினி படங்களில் வழக்கமாக இடம்பெற்று வரும் பாடல்களில் இருந்து புதிய வடிவத்தில் ஒரு மாஸ் பாடலாம்.

பாடலைக்கேட்ட ரஜினி, இதை முதல் பாடலாக படமாக்கி விடுவோமே என்று சொல்ல, சீக்கிரத்திலேயே அந்த பாடலை சென்னையில் படமாக்குகிறார்களாம்.எப்போதுமே தனது படங்களின் பாடல் காட்சிகளில் பலதரப்பட்ட கெட்டப்புகளில் வரும் ரஜினி, இந்த பாடலிலும் கெளபாய் தோற்றத்தில் இதுவரை வெளிப்படாத 4 விதமான கெட்டப்புகளில் நடிக்கிறாராம். அதோடு, சோனாக்ஷி சின்ஹா இடம்பெறும் அந்த பாடலில் அசத்தல் நடனமும் ஆடுகிறாராம் ரஜினி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி