லண்டன்:-உலகிலேயே அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடங்களில் இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான லண்டனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.மாஸ்டர்கார்டு குளோபல் சிட்டிஸ் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அதில், சென்ற ஆண்டு மட்டும் லண்டனுக்கு 18.7 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்ற ஆண்டை விட நடப்பாண்டில் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள் என்றும் கணித்துள்ளது.கி.பி.43-ல் ரோமானியர்கள் கண்டு எடுத்த நகரமான லண்டன் சுமார் 2000 ஆண்டு பழமை வாய்ந்தது. ஐரோப்பா கண்டத்தின் கலை, இலக்கியம், பொருளாதாரம், பாரம்பரியச் சிறப்பின் அடையாளமாக லண்டன் திகழ்கிறது.
மெட்ரோ ரயில், மாடி பஸ், ஓப்பன் ரூப் பஸ் என்று பல புதுமைகளைக் கண்டாலும் பழமையை தன்னுள் பாதுகாத்து வரும் நகரமாகவும் லண்டன் விளங்குகிறது.
லண்டனுக்கு அடுத்தபடியாக, பேங்காக், பாரீஸ், சிங்கப்பூர், துபாய் ஆகிய இடங்கள் பட்டியலில் அடுத்தடுத்து உள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி