அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு 5 புதிய ரயில்கள் அறிவிப்பு!…

ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு 5 புதிய ரயில்கள் அறிவிப்பு!…

ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு 5 புதிய ரயில்கள் அறிவிப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-மத்திய ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா நேற்று பாராளுமன்றத்தில் 2014–15ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட்டில் புதிய ரெயில்களுக்கான அறிவிப்புகளில் நாடு முழுவதும் மொத்தம் 58 புதிய ரெயில்கள் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் தமிழ்நாட்டுக்கு 5 புதிய ரெயில்கள் விடப்படுவது பற்றிய அறிவிப்பும் இதில் இடம் பெற்று உள்ளது.இதன்படி பிரிமியம் ரெயில் சேவையில், சென்னைக்கும் கொல்கத்தாவில் உள்ள ஷாலிமாருக்கும் இடையே குளுகுளு வசதி கொண்ட ஒரு ரெயில் இயக்கப்படுகிறது.இதேபோல் மதுரைக்கும் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கும் இடையே மற்றொரு பிரிமியம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் விடப்படுகிறது.

எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பொறுத்தவரை சென்னைக்கும், குஜராத் தலைநகர் ஆமதாபாத்துக்கும் இடையே வாரம் இரு முறை ரெயில் ஒன்று இயக்கப்படுகிறது.இதேபோன்று சென்னைக்கும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கும் இடையே ஒரு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் விடப்படுகிறது.இதேபோல் தமிழ்நாட்டின் ஓசூரில் இருந்து பெங்களூருக்கு வாரத்தில் 6 நாட்களுக்கு இயக்கப்படும் டீசல் ரெயில் சேவை பற்றிய அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்று உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி