செய்திகள்,திரையுலகம் படத்தின் பட்ஜெட் 75 லட்சம், ஆனால் இயக்குனர் சம்பளம் ஒன்றரை கோடி!…

படத்தின் பட்ஜெட் 75 லட்சம், ஆனால் இயக்குனர் சம்பளம் ஒன்றரை கோடி!…

படத்தின் பட்ஜெட் 75 லட்சம், ஆனால் இயக்குனர் சம்பளம் ஒன்றரை கோடி!… post thumbnail image
சென்னை:-பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா 75 லட்சம் ரூபாய் செலவில், 15 நாட்களில் ஐஸ்கிரீம் என்ற படத்தை எடுத்து சாதனை படைத்துள்ளார். இதற்காக அவர் வாங்கியுள்ள சம்பளம் ஒன்றரை கோடி ரூபாய். படத்தை பத்து கோடிக்கு வாங்க வியாபாரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ப்ளோஸ்காம் என்ற நவீன ஒளிப்பதிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதனை எடுத்துள்ளார். இப்போது பரவலாக உபயோகப்படுத்தப்படும் ஸ்டெடி கேம் என்ற கேமராவை அறிமுகப்படுத்தியதும் ராம்கோபால் வர்மாதான்.இது ஒரு திகில்கதை, ராம்கோபால் வர்மாவின் புதிய அறிமுகமான தேஜஸ்வி மதிவதாதான் ஹீரோயின். வீட்டில் தனியாக இருக்கும் அவர் தன் காதலன் வருகைக்காக காத்திருக்கிறார். காதலனும் வருகிறார்.

ஒரு காதல் ஜோடி தனி வீட்டில் இருந்தால் என்ன நடக்குமோ அதெல்லாம் நடக்கிறது. வந்திருப்பது காதலன் அல்ல என்பது இண்டர்வெல் பிளாக். அப்படியென்றால் வந்தவன் யார் என்பது கதையின் அடுத்த பகுதி. பாதி பயத்தையும், பாதி காமத்தையும் கேமராவே காட்டி விடுமாம். தெலுங்கிலும், இந்தியிலும் படத்தை வெளியிட இருக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி