செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் தனது வாழ்க்கையை படமாக எடுத்த 15 வயது பெண்!…

தனது வாழ்க்கையை படமாக எடுத்த 15 வயது பெண்!…

தனது வாழ்க்கையை படமாக எடுத்த 15 வயது பெண்!… post thumbnail image
சென்னை:-15 வயது சிறுமி ஷிரியா தினகர். பெங்களூரைச் சேர்ந்த பணக்கார வீட்டு வாரிசு. சிறு வயதில் விமானியாக வேண்டும் என்று விரும்பினார். ரஷியாவில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து 11 வயதில் பைலட் ஆகிவிட்டார். இது எப்படி சாத்தியமானது. பெற்றோர்களை எப்படி சம்மதிக்க வைத்தார். ரஷிய பயிற்சி மையம் எப்படி தேர்வு செய்தது. எப்படி படித்தார், ஜெயித்தார் என்பதையெல்லாம் ஒரு சினிமாவாகவே எடுத்துவிட்டார் ஷரியா தினகர்.

பில்லியன் டாலர் பேபி என்பது படத்தின் டைட்டில். கன்னட மொழியில் எடுத்திருந்தாலும் 6 மொழிகளில் டப் செய்யப்போகிறாராம். இது வெறும் டாக்குமெண்டரி படம் இல்லை பாட்டு பைட்டு நிறைந்த கமர்ஷியல் படம் என்கிறார் ஷிரியா.இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: 11 வயதில் நான் எப்படி பைலட் ஆனேன் என்பது பற்றி எல்லோரும் கேட்டுக் கொண்டே இருந்தார்கள், அவர்களுக்கு விளக்கம் சொல்லி சலித்துவிட்டது. பேசாமல் அதை சினிமாவாக எடுத்துவிட்டால் என்ன என்று தோன்றியது. அப்பா அம்மாவிடம் சொன்னேன் ஓகே சொல்லிவிட்டார்.

சினிமா பற்றிய புத்தகங்களை படித்தேன். என் வாழ்க்கை சம்பவங்களை திரைக்கதையாக எழுதினேன். நானே இயக்கி, நடித்தேன். இதற்கு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. மாணவர்கள் நம் சமுதாயத்தை வழிநடத்தும் வகையில் படம் எடுக்க வேண்டும் என்ற அப்துல் கலாம் கூறியிருந்தார். அதை மனதில் வைத்து படத்தை இயக்கி இருக்கிறேன். இந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தை அப்துல் கலாம் அறக்கட்டளைக்கு வழங்க இருக்கிறேன் என்கிறார் ஷிரியா தினகர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி