ஐந்து ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிக்கப் போகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்தான் ஆரம்பமாக உள்ளது.
ஜான் ஆபிரகாம் பிரபல ஆண் மாடலாக இருந்து திரையுலகிற்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் ஐஸ்வர்யா ராயும் இணைந்து நடிக்கப் போகும் முதல் படம் இது. இதற்கு முன் இருவரும ‘ஹேப்பி பர்த்டே’ என்ற படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால், அந்தப் படம் அதன் பின் ஆரம்பமாகவேயில்லை.
ஜான் ஆபிராகம் ‘ஜாஸ்பா’ படத்தில் அபு சலீம் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. படத்தில் அவர் நாயகன் இல்லையென்றாலும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறாராம். இந்தப் படத்தை இயக்குவதற்கு முன்பாக ஜான் ஆபிராகாமை வைத்து ‘மும்பை சாகா’ என்ற வேறொரு படத்தை இயக்கிய முடிக்க சஞ்சய் குப்தா திட்டமிட்டுள்ளாராம்.’ஜாஸ்பா’ படத்தில் அழகனையும், அழகியையும் ஜோடியாகப் பார்ப்பது வித்தியாசமாக இருக்கும் என்கிறார்கள் பாலிவுட் ரசிகர்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி