செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் தலாய்லாமாவின் சொற்பொழிவை கேட்க காஷ்மீர் வந்த ஹாலிவுட் நடிகர்!…

தலாய்லாமாவின் சொற்பொழிவை கேட்க காஷ்மீர் வந்த ஹாலிவுட் நடிகர்!…

தலாய்லாமாவின் சொற்பொழிவை கேட்க காஷ்மீர் வந்த ஹாலிவுட் நடிகர்!… post thumbnail image
லெஹ்:-திபெத்திய ஆன்மிக தலைவரான தலாய்லாமா வரும் 14ம் தேதி வரை நடைபெற உள்ள உலக அமைதிக்கான ‘காலச்சக்கரா’ நிகழ்ச்சியையொட்டி ஜம்மு காஷ்மீரில் உள்ள மலைகள் நிறைந்த மாவட்டமான லடாக்கின் முக்கிய பகுதியான லெஹ் நகரத்தில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றுகிறார்.

இந்நிலையில், தலாய்லாமாவின் புனிதமான சொற்பொழிவுகளிலிருந்து வாழ்க்கை பாடங்களை கற்றுக் கொள்வதற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு கெரி காஷ்மீர் வந்துள்ளார். இந்த தகவலை லடாக் புத்தமத கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில், 33 ஆண்டுகளுக்கு பிறகு மீ்ண்டும் தலாய்லாமாவை சந்திப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள நடிகர் ரிச்சர்டு அவருக்கு 79-வது பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

தலாய்லாமா பற்றி ரிச்சர்டு கூறுகையி்ல், நான் அவரை தெரிந்து கொள்வதால், அவருடைய குரலை கேட்பதால் பெரிய அதிர்ஷ்டத்தை பெற்றதாக கருதுகிறேன். என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி