இருப்பினும் தற்போது ப்ரியாமணிக்கு 30 வயது ஆகி விட்டதால், அவரை சந்திக்கும் மீடியாக்கள் அவரைப்பார்த்து கேட்கும் முதல் கேள்வியே எப்போது திருமணம்? என்பதாகத்தான் இருந்து வந்தது. ஆனபோதும், அதற்கு முறையான பதிலளிக்காத ப்ரியாமணி, ஒருநாள், தனது டுவிட்டரில் தனக்கொரு காதலர் இருப்பதாகவும், சமயம்கூடி வரும்போது அவர் யார் என்பதை சொல்வேன் என்று சூசகமாக செய்தி வெளியிட்டார்.இந்நிலையில, சமீபத்தில் மலையாள நடிகர் கோவிந்த் பத்ம சூர்யாவுடன் நின்றபடி டுவிட்டரில் வெளியிட்ட போட்டோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்தான் ப்ரியாமணி இத்தனை நாளும் ரகசியமாக வைத்திருந்த காதலராக இருக்குமோ? என்று மீடியாக்கள் செய்தியை பத்த வைத்து விட்டன. ஆனால், இந்த செய்தி ப்ரியாமணியை அதிர்ச்சியடைய செய்து விட்டது.
அதையடுத்து, உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும அவர், கோவிந்த் எனது நண்பர். அவருடன் எடுத்துக்கொண்ட ஒரு போட்டோவை டுவிட்டரில் வெளியிட்டிருந்தேன் அவ்வளவுதான். அதை இவ்வளவு பெரிய கதைகட்டி விடுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இலலை. மேலும் என் காதலரைப்பற்றி தெரிவிக்கும் நேரம் இன்னும் வரவில்லை. அப்போது விவரமாக அதுபற்றி நானே தெரிவிப்பேன் என்று சொல்லி மீடியாக்களின் வாயை அடைத்துள்ளார் ப்ரியாமணி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி