செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் பிரேசிலில் மேம்பாலம் இடிந்து 2 பேர் மரணம்!…

பிரேசிலில் மேம்பாலம் இடிந்து 2 பேர் மரணம்!…

பிரேசிலில் மேம்பாலம் இடிந்து 2 பேர் மரணம்!… post thumbnail image
பிரேசிலியா:-பிரேசில் நாட்டில் தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. அதை காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்துள்ளனர்.அங்குள்ள பெலோ ஹொரி ஷோண்ட் நகரில் வருகிற 10ம் தேதி அரை இறுதிப் போட்டி நடக்கிறது. அதையொட்டி அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது அங்கு மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதில் ஏராளமானவர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அந்த மேம்பாலம் திடீரென இடிந்தது.அதில், பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ் சிக்கியது. இச்சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர்.பாலம் இடிந்து விழுந்ததில் அதன் அடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் நசுங்கி சேதம் அடைந்தன. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி