அப்போது அவரை மறித்த வாலிபர்கள் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கு மறுத்த சிறுமி பின்னர் சென்றுள்ளார். அப்போது தீபெஷ் சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளான். சிறுமியை அவன் கற்பழித்துள்ளான். அதனை மற்ற வாலிபர்கள் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் இதனை வெளியே கூறினால் வீடியோவை இணையதளத்தில் பரவ விட்டுவிடுவேன் என்று வாலிபர்கள் மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து மாணவியை தொந்தரவு செய்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ரூ. 50 ஆயிரம் கொடுக்கவில்லை என்றால் இணையதளத்தில் பரவ செய்வேன் என்று ரிதிஷ் சிறுமியின் பெற்றோரை மிரட்டியுள்ளான். பின்னர் சிறுமியின் குடும்பத்தார் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி