செய்திகள்,திரையுலகம் அஜீத்தை பாராட்டிய நடிகை திரிஷா!…

அஜீத்தை பாராட்டிய நடிகை திரிஷா!…

அஜீத்தை பாராட்டிய நடிகை திரிஷா!… post thumbnail image
சென்னை:-அஜீத்தும் திரிஷாவும் ஏற்கனவே ‘ஜி’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’ படங்களில் இணைந்து நடித்தனர். தற்போது கவுதம் மேனன் இயக்கும் படத்திலும் சேர்ந்து நடிக்கிறார்கள். இதில் இன்னொரு கதாநாயகியாக அனுஷ்காவும் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது.

இப்படத்துக்கு ஆயிரம் தோட்டாக்கள் என்ற தலைப்பை பரிசீலிப்பதாக பேசப்பட்டது. ஆனாலும் அது உறுதியான தகவல் இல்லை. அஜீத் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.அஜீத்துடன் மீண்டும் நடிப்பது திரிஷாவுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து திரிஷா கூறும் போது அஜீத்துடன் நான் நடிக்கும் நான்காவது படம் இதுவாகும்.எனது திறமை பற்றி அவர் ஏற்கனவே அறிந்து இருந்தால் இந்த படத்தில் அழுத்தமான கேரக்டரில் என்னை நடிக்க வைத்துள்ளார். தல தலதான் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி