செய்திகள்,திரையுலகம் இணைய தளத்தில் வெளியான அனுஷ்காவின் வீடியோ!…

இணைய தளத்தில் வெளியான அனுஷ்காவின் வீடியோ!…

இணைய தளத்தில் வெளியான அனுஷ்காவின் வீடியோ!… post thumbnail image
சென்னை:-ராணி ருத்ரம்மா தேவி, பாகுபலி படங்களில் நடிக்க கமிட்டானதில் இருந்தே அனுஷ்காவுக்கு பல வாள் சண்டை, குதிரையேற்றம் என பல பயிற்சிகளை அளித்து வருகிறார்கள் அப்படங்களின இயக்குனர்கள். இதில் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும பாகுபலி படத்தில் நடிக்கும் அனுஷ்கா உள்பட அப்படத்தில் நடிக்கும் சிலருக்கு தினமும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வைத்தே படப்பிடிப்பை தொடங்குகிறாராம் இயக்குனர்.

ஆனால், இப்படி மாதக்கணக்கில் அனுஷ்கா செய்து வந்த உடற்பயிற்சியை யாரோ வீடியோவில் பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டு விட்டனர். இதை படம் திரைக்கு வரும நேரத்தில், அனுஷ்கா இந்த படத்துக்காக செய்த தியாகங்களாக சொல்லி வெளியிட்டு பப்ளிசிட்டி தேடிக்கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்த ராஜமவுலிக்கு இது பெரிய அதிர்ச்சியாகி விட்டது.

ஆனால் இப்போது தனக்கே தெரியாமல் அந்த உடற்பயிற்சி வீடியோக்கள் வெளியாகி விட்டதால், இனியும் தாமதிக்க வேண்டாம் என்று தான் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அனுஷ்கா வியர்வை சொட்ட சொட்ட செய்த உடற்பயிற்சியே பாகுபலி படத்தில் அவரது உழைப்புக்கு சான்று என்றும் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி