இந்த படத்தில் இவரை நடித்த முதல் நாளில் இருந்தே அவருக்கு மொட்டையடித்து விக் வைத்துதான் படம் முழுக்க படமாக்கினாராம் ஞானராஜசேகரன். அடிக்கடி முடி வளர்ந்து கொண்டிருக்க அவ்வப்போது மீண்டும் மீண்டும் அவருக்கு மொட்டையடித்துக்கொண்டேயிருந்தார்களாம். அவர் மட்டுமின்றி அந்த படத்தில் நடித்த நிழல்கள் ரவி, சரத்பாபு உள்பட நூற்றுக்கணக்கான நடிகர்-நடிகைகளுக்கும் மொட்டை அடித்துதான் படப்பிடிப்பு நடத்தியுள்ளாராம்.
ஒரு கட்டத்தில் ராமானுஜர் மேல்படிப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்று விட்டதால், அந்த காலகட்டத்தை படமாக்க நிஜமான ஹாலிவுட் நடிகர்களையே நடிக்க வைத்துள்ளார்களாம். ஆனால், வெளிநாடு சென்றபோதும் தனது கெட்டப்பை மாற்றாமலேயே ராமானுஜர் இருந்ததால், அங்கே படமாக்கியபோதும் மொட்டைத்தலையில் விக் அணிந்துதான் நடித்தாராம் அபினய்.இதுபற்றி டைக்ரடர் ஞானராஜசேகரன் கூறுகையில், கதைப்படி மொட்டையடிக்க வேண்டும் என்று அபினயிடம் சொன்னபோது அவர் எந்த தயக்கமும் காட்டவில்லை. கதைக்காக எப்படி வேண்டுமானாலும் மாற தயாராக இருக்கிறேன் என்று சொன்னார். அதுதான் இந்த கதாபாத்திரத்தின் மீது அவர் கொண்ட ஈடுபாட்டை காண்பித்தது. அதோடு, ஒரு படத்தில் ஹீரோ மொட்டையடித்து நடிப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால், தயாரிப்பாளரைத்தான் யாரும் மொட்டையடிக்கக்கூடாது என்றும் கிண்டலாக சொல்கிறார் ஞானராஜசேகரன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி