செய்திகள்,திரையுலகம் தி ரெய்டு 2 (2014) திரை விமர்சனம்…

தி ரெய்டு 2 (2014) திரை விமர்சனம்…

தி ரெய்டு 2 (2014) திரை விமர்சனம்… post thumbnail image
இந்தோனேசிய காவல்துறையில் ரகசிய போலீசாக செயல்படுபவர் ராமா. அவருக்கு, அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் மிகப்பெரிய குற்றங்களில் ஈடுபடும் நிழல் உலக தாதாவின் கொள்ளை கும்பலை பிடிக்கும் வேலை தரப்படுகிறது. அந்த தாதா கும்பலுக்கு காவல்துறையில் சிலர் உதவி செய்கிறார்கள்.

தாதா கும்பலை பிடிப்பது சவாலான விஷயம் என கருதும் ராமா, அக்கும்பல் தலைவனின் மகன் உகாக்கிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவன் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறான் என்பதறிந்து அவனைக் கொண்டே அக்கும்பலை பிடிக்க திட்டமிடுகிறார். அதன்படி, உகாக்கின் நம்பிக்கையை பெற குற்றவாளியை போல் சிறைக்குள் நுழைகிறார் ராமா.இரண்டு வருட சிறை வாசத்திற்கு பின் ராமா, உகாக்கின் நண்பனாக வெளிவந்து தாதா கும்பலில் இணைகிறார். அதில் இருந்தவாறு கொள்ளை கும்பலின் மொத்த நெட்வொர்க்கையும், காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளையும் கண்டுபிடித்து தனது முயற்சியில் வெற்றி பெற்றாரா? என்பதே மீதிக்கதை.

இப்படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ராமா (இகோ உவேய்ஸ்) சண்டைக்காட்சிகளில் அசத்தியிருக்கிறார். அதிலும் கார் சேஸிங் காட்சியில் அற்புதமாக நடித்திருக்கிறார். கொள்ளை கும்பல் தலைவனின் மகனாக வரும் உகாக்கும் (அரிபின் புத்ரா) தன் பங்குக்கு சண்டைக்காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.படம் முழுவதும் சண்டை காட்சிகள் தான் நிறைந்துள்ளது. இந்த வருடத்தின் வன்முறை நிறைந்த படமாக இப்படம் காட்சியளிக்கிறது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த கேரேத் இவான்ஸ் படத்தின் கதையை உருவாக்கியதுடன் தானே இயக்கம் செய்து முத்திரை பதித்திருக்கிறார். படம் முழுவதும் ஆக்சன் காட்சிகளை வைத்து சண்டை பிரியர்கள் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘ரெய்டு 2’ சண்டை……..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி