மொத்தம் 220 பயணிகளும், 13 ஊழியர்களும் இந்த படகில் அப்போது பயணம் செய்துள்ளனர். இதில் முதலில் 20 பேர் காயமடைந்ததாகத் தெரிவித்த அதிகாரிகள் பின்னர் அந்த எண்ணிக்கையை 57 என்று மாற்றினர். இவர்களில் இரண்டு கொரிய நாட்டவரும், ஒரு ஜப்பானியரும் அடங்குவர் என்று இந்த படகு சேவையை நடத்திவரும் ஷுன் டக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்று கூறப்படுகின்றது.
கடந்த எட்டு மாதங்களில் மகாவ்- ஹாங்காங் படகு வழிகளில் நடைபெறும் மூன்றாவது விபத்து இதுவென்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த நவம்பர் மாதம் ஹாங்காங்கிலிருந்து மகாவ் சென்றுகொண்டிருந்த படகு ஒன்று அங்குள்ள சிறிய தீவுகளின் ஒன்றின் அருகில் அடையாளம் தெரியாத பொருள் ஒன்றின் மீது மோதியதில் 87 பேர் காயமடைந்தனர். பின்னர் கடந்த மாதம் மக்காவிலிருந்து ஹாங்காங் வந்து கொண்டிருந்த படகு ஒன்று சீனப் படகுடன் மோதியதில் 33 பேர் காயமடைந்தனர்.
ஒரு மணி நேரம் பிடிக்கும் இந்தப் போக்குவரத்து பொதுவாக பயணிகள் படகுகள் மூலமாகவே நடைபெறுகின்றது. கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தப் பகுதியில் ஒரு பயணிகள் படகும், சுற்றுலா படகும் மோதிக் கொண்டதில் 39 பேர் பலியானது கடல் பாதுகாப்பு குறித்த அச்சத்தை பயணிகளிடம் ஏற்படுத்தியது.கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இந்தப் பகுதியில் நடைபெற்ற விபத்துகளில் இதுவே மோசமான விபத்தாக அறியப்பட்டது. நல்ல பாதுகாப்பு முறைகளைக் கொண்டிருப்பதாக பெருமை கொள்ளும் ஆசிய நிதி மையத்திற்கு இந்த சம்பவம் ஒரு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தவிர படகு போக்குவரத்துகளால் நிரம்பிக் காணப்படும் இங்கு விபத்துகள் என்பது அரிதாக நடைபெறுகின்ற ஒரு விஷயமாகவே கூறப்படுகின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி