சென்னை:-நடிகர் அஜீத் தனது வீட்டில் வேலை பார்க்கும் சமையல் காரர், தோட்டக்காரர், டிரைவர் உள்ளிட்ட 10 பேருக்கு சொந்த செலவில் வீடு கட்டி கொடுக்க திட்டமிட்டார். இதற்காக பழைய மகாபலிபுரம் சாலையில் ஐந்து கிரவுண்ட் நிலம் வாங்கினார். அந்த இடத்தை பணியாளர்கள் பெயரிலேயே ஆளுக்கு அரை கிரவுண்ட் என பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார்.
அதன் பிறகு வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் அஜீத் மனைவி ஷாலினியுடன் பங்கேற்றார். பணியாளர்கள் குடும்பத்தினரும் வந்து இருந்தார்கள். கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்தது. தற்போது 10 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. வீட்டில் மரச்சாமான்கள் வாங்கி போடப்பட்டு உள்ளன.
அஜீத் தற்போது கெளதம்மேனன் இயக்கும் படத்தில் நடிப்பதற்காக மலேசியா சென்றுள்ளார்.சில தினங்களில் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்புகிறார். அதன் பிறகு கிரஹப்பிரவேசம் நடத்தி தனது பணியாளர்கள் ஒவ்வொரு வரையும் புது வீட்டில் குடி வைக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி