செய்திகள் 2வது திருமணம் செய்த மகளை கல்லால் அடித்து கொன்ற தந்தை!…

2வது திருமணம் செய்த மகளை கல்லால் அடித்து கொன்ற தந்தை!…

2வது திருமணம் செய்த மகளை கல்லால் அடித்து கொன்ற தந்தை!… post thumbnail image
பாகிஸ்தான்:-பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரை சேர்ந்தவர் முகமது அசீம். இவரது மகள் பர்சானா பர்வீன் (வயது 25). பர்வீனை அவளது தந்தை அசீம், மசார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். மசார் முன்பே திருமணமானவர். முதல் திருமணத்தில் தனது மனைவியை கொன்று விட்டு சிறை சென்றவர் மசார்.

எனினும் புகார் செய்த அவரது மகன் மன்னித்து விடுவதாக கூறியதால் வழக்கில் இருந்து மசார் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், முகமது இக்பால் என்பவரை பர்வீன் காதலித்துள்ளார். அவருக்கு வயது 45. இருவரும் லாஹர் நகரின் நான்கானா சாகிப் பகுதியை சேர்ந்தவர்கள். பர்வீனை இக்பால் கடத்தி விட்டதாக அவளது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.முதல் திருமணம் புரிந்த பர்வீன் விவாகரத்து செய்யாமல் மற்றொருவரான இக்பாலை திருமணம் செய்து உள்ளார்.இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டு தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வந்த பர்வீனை அவரது தந்தை மற்றும் பர்வீனின் இரு சகோதரர்களான ஜாகித் மற்றும் முஸ்தாபா மற்றும் முதல் கணவரான மசார் ஆகியோர் கற்களை கொண்டு தாக்கியுள்ளனர்.

வழக்கு முடிந்து வெளியே வந்த கர்ப்பிணியான பர்வீனை அங்கு கிடந்த செங்கற்களால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பர்வீன் இறந்து விட்டாள். இது தொடர்பாக பர்வீனின் தந்தை கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கு விதிக்கப்பட்ட 7 நாட்கள் சிறை காவலில் நடத்தப்பட்ட விசாரணை முடிவில் பெறப்பட்ட இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.விசாரணைக்கான காவல் போதுமென்றும், குற்றவாளியிடம் இருந்து இறுதி அறிக்கை பெறப்பட்டு விட்டது என்றும் எனவே, காவல் நீட்டிப்பு தேவையில்லை என்றும் நீதிபதியிடம் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து பர்வீனின் தந்தை சிறையில் அடைக்கப்பட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி