செய்திகள் கழிவறை தொட்டியில் கிடந்த 800 குழந்தைகளின் எலும்பு கூடுகள்!…

கழிவறை தொட்டியில் கிடந்த 800 குழந்தைகளின் எலும்பு கூடுகள்!…

கழிவறை தொட்டியில் கிடந்த 800 குழந்தைகளின் எலும்பு கூடுகள்!… post thumbnail image
டுவாம்:-அயர்லாந்து நாட்டில் உள்ள டுவாம் என்ற இடத்தில் பெண்கள் பாதுகாப்பு இல்லம் ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த இல்லத்தை கன்னியாஸ்திரிகள் நடத்தி வந்தனர்.பாதுகாப்பு இல்லத்தில் திருமணம் ஆகாமல் கர்ப்பிணியானவர்கள் மற்றும் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த இல்லம் 1925ம் ஆண்டு முதல் 1961ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தது. அதன்பிறகு அதை மூடிவிட்டார்கள். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த இல்லத்தின் அருகே உள்ள கழிவறை தொட்டியின் கான்கிரீட் கலவை இடிந்து விழுந்தது. அப்போது அந்த தொட்டிக்குள்ளே ஏராளமான குழந்தைகளின் எலும்பு கூடுகள் கிடந்தன. பிறந்து 2 நாள் ஆன குழந்தைகளில் இருந்து 7 வயது வரை உள்ள குழந்தைகளின் எலும்பு கூடுகள் அவற்றில் கிடந்தன. மொத்தம் 800 குழந்தைகளின் எலும்பு கூடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அயர்லாந்தில் 1840ம் ஆண்டு கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அப்போது பட்டினியால் ஏராளமானோர் உயிரிழந்தனர். அதில் இறந்த குழந்தைகளின் எலும்பு கூடாக இது இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் இப்போது அது சம்மந்தமாக ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் இந்த குழந்தைகள் பட்டினியால் இறந்தவர்கள் அல்ல என்பது தெரியவந்தது. அந்த இல்லத்தில் தங்கி இருந்த பெண்களோ அல்லது இல்லத்தை நடத்தியவர்களோ குழந்தைகளை கொன்று கழிவறை தொட்டியில் போட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே இதுபற்றி விசாரணை நடத்த அயர்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி