செய்திகள்,திரையுலகம் ஒரே கதையில் நடிக்கும் நடிகர்கள் விஜய் மற்றும் ஜீவா!…

ஒரே கதையில் நடிக்கும் நடிகர்கள் விஜய் மற்றும் ஜீவா!…

ஒரே கதையில் நடிக்கும் நடிகர்கள் விஜய் மற்றும் ஜீவா!… post thumbnail image
சென்னை:-ரவி கே சந்திரன் இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் யான் படத்தின் கதையும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தின் கதையும் ஒரே கதை என்று கிசுகிசுக்கின்றனர் திரையுலகினர்.

இத்தனைக்கும் யான் படத்தின் கதையே ஏற்கனவே வெளியான மரியான் கதையை ஒத்திருக்கிறது என்ற சொல்லப்படுகிறது. யான் படத்தின் கதைப்படி வெளிநாட்டுக்கு செல்லும் ஜீவாவை தீவிரவாதிகள் கடத்திச் சென்று பிணயக்கைதியாக அடைத்து வைக்கின்றனர். அவர்களிடமிருந்து ஜீவா எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் யான் படத்தின் திரைக்கதை.

கத்தி படத்தின் கதையிலும் இதே பிணயக்கைதிகள் சமாச்சாரம்தான். சுமார் 90 பேரை தீவிரவாதிகள் கடத்தின் சென்று ஒரு இடத்தில் பிணயக்கைதியாக அடைத்து வைக்கின்றனர். அவர்களை விஜய் மீட்பதுதான் கத்தி படத்தின் கதை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி