அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் தமிழக கவர்னராகிறார் ஜஸ்வந்த் சிங்?…

தமிழக கவர்னராகிறார் ஜஸ்வந்த் சிங்?…

தமிழக கவர்னராகிறார் ஜஸ்வந்த் சிங்?… post thumbnail image
ஜெய்ப்பூர்:-பா.ஜனதா கட்சியின் முக்கிய தலைவரான ஜஸ்வந்த் சிங் நாடாளுமன்ற தேர்தலில் தனது சொந்த மாநிலமான ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் பா.ஜனதா கட்சி அவருக்கு வாய்ப்பு தர மறுத்துவிட்டது.

இதை ஏற்க மறுத்த அவர் அத்தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு பா.ஜ.க வேட்பாளரான சோனாராமிடம் தோல்வியடைந்தார். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததால் மீண்டும் கட்சியில் சேர முடிவெடுத்த ஜஸ்வந்த் சிங், அக்கட்சியின் மூத்த தலைவரான அத்வானியை சந்தித்தார். அத்வானியை சந்தித்த பின் ஜஸ்வந்த் சிங்கை கட்சியில் சேர்த்துக் கொள்வதுடன் அவருக்கு கவர்னர் பதவி வழங்கவும் பா.ஜ.க முடிவு செய்தது.

அவர் தமிழகத்தின் கவர்னராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இந்த தகவலை அவர் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் மீண்டும் அவர் இணைய உள்ளதாக தெரிவித்தனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடியும் ஜஸ்வந்த் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த கடிதத்தில் மோடி என்ன எழுதியிருந்தார் என ஜஸ்வந்த் இதுவரை எதுவும் கூறவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி