சகட்டு மேனிக்கு போலீஸ் அதிகாரிகள் கேரக்டரில் நடித்தார். கடந்த ஆண்டு மும்பை போலீஸ் படத்தில் அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆன்டனி மோஸசாக நடித்தார். மெம்மரி படத்தில் அசிஸ்டெண்ட் கமிஷனர் சாம் அலெக்சாக நடித்தார். அருணாசாப் என்ற இந்திப் படத்தில் அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆர்யா சகலாக நடித்தார். இந்த ஆண்டு சமீபத்தில் வெளிவந்த செவன்த் டே படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் டேவிட் ஆபிரகமாக நடித்தார்.
இப்படி தொடர்ந்து போலீஸ் அதிகாரியாக நடித்து பிருத்விராஜுக்கு பேராடித்துவிட்டது. இனி சிறிது காலத்துக்கு போலீஸ் கதைகளை கேட்பதுமில்லை. நடிப்பதுமில்லை என்று முடிவு செய்திருக்கிறார். அதனால் இப்போது தனது பேவரிட் ரொமாண்டிக்கிற்கு மாறிவிட்டார். அடுத்து அவர் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் என்னு நிண்ட மொய்தீன் படம் ஆழமான காதல் கதையை கொண்டது. கோழிக்கோட்டில் வாழ்ந்த மொய்தீன், காஞ்சனா ஆகியேரின் உண்மை கதை. ஜோடியாக நடிப்பவர் பூ பார்வதி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி