செய்திகள்,திரையுலகம் ஒரே வருடத்தில் இரண்டு மெகா படங்களை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!…

ஒரே வருடத்தில் இரண்டு மெகா படங்களை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!…

ஒரே வருடத்தில் இரண்டு மெகா படங்களை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!… post thumbnail image
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் இருவரும் இணைந்த முதல் படம் துப்பாக்கி. அந்த படம் சூப்பர் ஹிட்டானதால்,அப்படத்தை இந்தியில் ஹாலிடே என்ற பெயரில் இயக்கியுள்ளார் முருகதாஸ். அப்படத்தில் அக்சய் குமார் நாயகனாக நடித்திருக்கிறார்.

அந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பே தமிழில் விஜய் நடிப்பில் கத்தி படத்தை தொடங்கி விட்ட முருகதாஸ் இந்த படத்தை 60 சதவிகிதத்துக்கு மேல் இயக்கிய பிறகு இப்போது ஹாலிடே படத்தை வெளியிடும் வேலைகளில் இறங்கியுள்ளார். கத்தி படப்பிடிப்பு நடந்து வந்த போது ஹாலிடே படத்தின் இறுதிகட்ட வேலைகளிலும் கவனம் செலுத்தி வந்த முருகதாஸ் தற்போது அப்படத்தின் இறுதிகட்ட பணிகளுக்காக மும்பை சென்றிருக்கிறார்.

ஜூன் மாதத்தில் ஹாலிடே படத்தை வெளியிடயிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், தீபாவளிக்கு விஜய்யின் கத்தியை வெளியிடுகிறார். இந்த வருடத்தில் மட்டும் முருகதாஸ் இயக்கத்தில் இரண்டு மெகா படங்கள் வெளியாகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி